For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாஜகவுக்கு ஆதரவு தரமாட்டோம்... கௌடா கட்சி அதிரடி அறிவிப்பு

கர்நாடகா தேர்தலில் மெஜாரிட்டி இல்லாவிட்டால் பாஜகவுக்கு ஆதரவு கிடையாது என தேவகௌடா கட்சி அறிவித்துள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    காங்கிரஸ் கட்சியுடன் ஜேடிஎஸ் கட்சி கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க வாய்ப்பு- வீடியோ

    பெங்களூர்: கர்நாடகா தேர்தலில் மெஜாரிட்டி இல்லாவிட்டால் பாஜகவுக்கு ஆதரவு கிடையாது என்றும் காங்கிரஸ் கட்சி அவர்களாகவே கேட்டால் கொடுப்போம் என்றும் மதசார்பற்ற ஜனதா தளம் தனது நிலையை விளக்கியுள்ளது.

    கர்நாடகத்தில் சட்டசபை தேர்தல் நேற்று நடந்து முடிந்தது. மொத்தம் 224 தொகுதிகளில் 222 தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெற்றது. மற்ற இரு தொகுதிகளின் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.

    தேர்தல் எந்த ஒரு கட்சி ஆட்சி அமைக்க வேண்டுமென்றாலும் 112 தொகுதிகளில் வெற்றி பெற்றாக வேண்டும். இது தனித்தோ அல்லது மற்ற கட்சியின் ஆதரவின் பேரிலோ இந்த 112 என்ற இலக்கை அடையலாம்.

    மெஜாரிட்டி இல்லை

    மெஜாரிட்டி இல்லை

    தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் நேற்று வெளியிடப்பட்டன. மொத்தம் 9 கருத்து கணிப்புகளிலும் எந்த கட்சிக்கு மெஜாரிட்டி கிடைக்காது என்று வந்துள்ளது. வெளியிடப்பட்ட கருத்து கணிப்புகளை பொறுத்தவரை பாஜகவுக்கு 97 இடங்களும், காங்கிரஸுக்கு 90 இடங்களும் , ஜேடிஎஸ் எனப்படும் மதசார்பற்ற ஜனதா தளத்துக்கு 31 இடங்களும் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளன.

    தேவகௌடா மறுப்பு

    தேவகௌடா மறுப்பு

    தேர்தல் பிரசாரத்தின்போது காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறுகையில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி பாஜகவின் பி அணி என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன என்று குற்றம்சாட்டியிருந்தார். இதை தேவகௌடா வன்மையாக கண்டித்ததுடன் அதை மறுப்பு தெரிவித்து தங்கள் கட்சி காங்கிரஸ் மற்றும் பாஜகவை ஆதரிக்காது என்றார்.

    கிங் மேக்கராக இல்லை

    கிங் மேக்கராக இல்லை

    தேவ கௌடா கூறுகையில் எங்கள் கட்சியின் செயல்பாடுகள் நன்றாகவே உள்ளன. எனவே நாங்கள் ஆட்சியில் அமர சாத்தியக்கூறுகள் உள்ளன என்றும் நாங்கள் கிங்காகவே இருப்போம், கிங் மேக்கராக இருக்க மாட்டோம் என்றும் தெரிவித்தார். தேர்தல் நடந்து முடிந்து எக்ஸிட் போல் வெளியானதை அடுத்து தனித்து ஆட்சி அமைப்போம் என்பது குறித்த பேச்சை ஜேடிஎஸ் நிறுத்திக் கொண்டது.

    யார் ஆட்சி

    யார் ஆட்சி

    இந்த தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்பதால் கிங் மேக்கராக உருவாகும் வாய்ப்பு ஜேடிஎஸ் கட்சிக்கு உள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் டேனிஷ் அலி கூறுகையில், பாஜகவுக்கு ஆதரவு என்ற கேள்விக்கே இடமில்லை. ஒரு வேளை காங்கிரஸ் கட்சிக்கு தனிபெரும்பான்மை கிடைக்காவிட்டால் 100 தொகுதிகளும் கீழ் காங்கிரஸ் பெற்றால் அது காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாகும்.

    எல்லா நேரமும்...

    எல்லா நேரமும்...

    ஒவ்வொரு நேரமும் மதசார்பின்மையை காட்டும் பொறுப்பு ஜேடிஎஸ்ஸுக்கு மட்டுமே இல்லை என்றார் அவர். எனவே இந்த தேர்தலில் பாஜக தனிபெரும்பான்மை பெற்றால் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும் என்பது தெளிவாகிவிட்டது.

    English summary
    Deve Gowda's party explains its stand that they dont extend their support to BJP. It was the responsibility of Congress to ask support of us.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X