For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குழந்தைகளின் தவறான இணையப் பழக்கங்களை கண்காணிக்க - பெற்றோருக்கு புது ”ஆப்”!

Google Oneindia Tamil News

டெல்லி: தங்கள் குழந்தைகள் இணையதளங்களில் மூழ்கி கிடக்காமல் அவர்களை கண்காணித்து பாதுகாப்பாக வழிநடத்த, பெற்றோர்களுக்கென பிரதியேகமாக வடிவமைக்கப்பட்ட பல்வேறு அப்ளிகேஷன்கள் சந்தையில் அறிமுகமாகி வருகிறது.

இன்றை சமூக சூழல் மற்றும் கல்வி முறையில் இணைய பயன்பாடு தவிர்க்க முடியாத இடத்தை பிடித்துள்ளது. இணையத்தை செல்லும் இடங்களுக்கு கையோடு எடுத்துச்செல்லும் வசதியும் உள்ளது.

Web monitoring mobile apps for parents

ஸ்மார்ட் போன், டேப்லட் கம்பியூட்டர், லேப்டாப் வழியாக உலக தகவல்கள் மொத்தத்தையும் உள்ளங்கையில் கொண்டு வந்துவிடுகிறது இணையம். ஆனால், அதிக நேரம் இணையத்தில் மூழ்கி கிடக்கும் வளர் இளம் பருவகுழந்தைகளுக்கு இதுவே பிரச்னையாகவும் மாறி மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

குழந்தைகள் பாதுகாப்பு:

எனவே. இணையத்தை பயன்படுத்துவதில் இருக்கும் பாதிப்பையும் பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். இதை கருத்தில் கொண்டு பல தனியார் நிறுவனங்கள், குழந்தைகளை பாதுகாப்பாக இணையத்தை பயன்படுத்த பெற்றோருக்கு வழி காட்டும் சிறப்பு ஆப்ஸ்களை வெளியிட்டு வருகின்றன.

இணைய கண்காணிப்பு:

இந்த ஆப் மூலும், தங்களது குழந்தைகள் எந்த இணைய தளத்தை பயன்படுத்தக்கூடாது என்பதை பெற்றோர்கள் தங்களது கட்டுபாட்டில் வைத்து கொள்ள முடியும். டெல்லியை சார்ந்த தனியார் நிறுவனம் "இகாவாச்" என்ற இணைய கண்காணிப்பு அப்ளிகேஷனை அறிமுகப்படுத்தியுள்ளது.

இரண்டு பாதுகாப்பு ஆப்கள்:

இந்த அப்ளிகேஷன், குழந்தைகள் இணையத்தை பயன்படுத்த துவங்கினால், அது பற்றி பெற்றோர்களுக்கு தகவல் அனுப்பி தெரிவிக்கும்.

மொபைல் கண்காணிப்பு:

இதே போன்று, துபாயை சேர்ந்த ராகவ் மீமணி என்பவர் வடிவமைத்துள்ள "நிஸ் சிந்த்" என்ற இணைய கண்காணிப்பு அப்ளிகேஷன், ‘இன் கம் மிங்', ‘அவுட் கோ யிங்' மற்றும் ‘மிஸ்டு கால்கள்' உள்ளிட்ட தொலைபேசி அழைப்புகள் பற்றி பெற்றோர்களுக்கு தெரிவிக்கும்.

ஆபத்து எச்சரிக்கை:

மேலும், குழந்தைகள் ஆபத்துகளில் சிக்கி கொண்டால் அது பற்றி எச்சரிக்கை செய்து உதவிக்கு அழைக்க ஜிபிஎஸ் வசதியையும், பெற்றோர்கள் பொருத்திக் கொள்ள முடியும்.

தவறான பதிவுகள் குறித்த எச்சரிக்கை:

இதே போன்று, அமெரிக்காவில் பயன்பாட்டில் உள்ள "மாமா பியர்" அப்ளிகேஷன் கடந்த 2012 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது, தங்கள் குழந்தைகள், பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளை பெற்றோர்கள் கண்காணிக்கும் வசதி உள்ளது. குழந்தைகள் தவறான வார்த்தைகளை பயன்படுத்தி செய்தியை பதிவு செய்தால், அது பற்றி தானாக தகவல் அனுப்பி பெற்றோர்களை எச்சரிக்கை செய்யும்.

நேர நிர்வாகமும் உண்டு:

மேலும், தங்கள் குழந்தைகள் எவ்வளவு நேரம் இணையத்தை பயன்படுத்த வேண்டும் என்பதை பெற்றோர்களே முடிவு செய்து அதற்கேற்ப நேரத்தை பதிவு செய்யலாம்.

English summary
A number of start ups are jumping into the market for feature loaded mobile applications that enable parents to monitor their children's activities on the Internet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X