For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இஸ்ரோவின் வர்த்தக பிரிவான ஆன்ட்ரிக்ஸ் இணையதளத்தை ஹேக் செய்த சீனர்கள்

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: இஸ்ரோவின் வர்த்தகப் பிரிவான ஆன்ட்ரிக்ஸின் இணையதளத்தை சீன ஹேக்கர்கள் இன்று ஹேக் செய்துள்ளனர்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் வர்த்தகப் பிரிவு ஆன்ட்ரிக்ஸ். அந்த ஆன்ட்ரிக்ஸின் antrix.gov.in என்ற இணையதள லிங்க்கை இன்று கிளிக் செய்தபோது விளையாட்டுத்துறை பொருட்கள் விற்பனை குறித்த விவரம் வந்தது.

Website of ISRO's Commercial Arm Antrix Hacked, Reportedly by Chinese Hackers

அந்த இணையதளத்தை சீனாவைச் சேர்ந்த ஹேக்கர்கள் தான் ஹேக் செய்திருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆந்திராவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி சி-28 ராக்கெட் மூலம் 5 வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டன. இஸ்ரோ இதுவரை 45 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இஸ்ரோவின் ஆன்ட்ரிக்ஸ் இணையதளம் ஹேக் செய்யப்பட்டுள்ளது.

English summary
ISRO's commercial arm Antrix was hacked on sunday. It is believed to be the handiwork of Chinese hackers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X