For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மே.வ. மஜ்லிஸ் கட்சிதலைவர் திரிணாமுல் காங்.க்கு தாவல்! மாநிலத்துக்கு வராதீங்க என ஓவைசிக்கு அட்வைஸ்

Google Oneindia Tamil News

கொல்கத்தா: மேற்கு வங்க மஜ்லிஸ் கட்சியின் தலைவர் ஷேக் அன்வர் ஹூசைன் பாஷா (Sheikh Anwar Hussain Pasha) அந்த கட்சியில் இருந்து திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார்.

மேற்கு வங்க சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. மேற்கு வங்க தேர்தலில் ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

West Bengal AIMIM leader joins TMC

பீகார் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு 5 இடங்களை கைப்பற்றியது ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி. இதேபோல் மேற்கு வங்கத்தில் காங்கிரஸ்-இடதுசாரிகள், திரிணாமுல் காங்கிரஸின் வாக்குகளை மஜ்லிஸ் கட்சி பிரிக்கலாம் எனவும் கூறப்பட்டு வந்தது.

6 முறை எம்.பி, மத்திய அமைச்சர், அஸ்ஸாமின் 15 ஆண்டு கால முதல்வராக கோலோச்சிய தருண் கோகாய்!6 முறை எம்.பி, மத்திய அமைச்சர், அஸ்ஸாமின் 15 ஆண்டு கால முதல்வராக கோலோச்சிய தருண் கோகாய்!

இந்நிலையில் மேற்கு வங்க மாநில மஜ்லிஸ் கட்சியின் மூத்த தலைவர் ஷேக் அன்வர் ஹூசைன் பாஷா அந்த கட்சியில் இருந்து திரிணாமுல் காங்கிரஸுக்கு தாவி உள்ளார். மேலும் ஓவைசியின் நடவடிக்கைகள் பாஜகவுக்கு உதவுவதாக இருப்பதாகவும் அவர் குற்றச்சாட்டினார்.

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் உரத்து குரல் எழுப்பியவர் மமதா பானர்ஜி. ஆகையால் அவரையே முஸ்லிம்கள் ஆதரிக்க வேண்டும் என்றும் ஷேக் அன்வர் ஹூசைன் பாஷா வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன் ஓவைசி மேற்கு வங்க மாநிலத்துக்குள் நுழைய வேண்டாம்; அப்படி வந்தால் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்க கதவுகளை மூடுங்கள் எனவும் ஷேக் அன்வர் ஹூசைன் பாஷா கூறியுள்ளார்.

English summary
West Bengal AIMIM convenor Sheikh Anwar Hussain Pasha joined the Trinamool Congress on Monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X