For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொல்கத்தாவில் அமித்ஷா பங்கேற்ற பேரணியில் கலவரம்... வாகனங்களுக்கு தீ வைப்பு... போலீஸ் தடியடி

Google Oneindia Tamil News

கொல்கத்தா: மேற்கு வங்காளம் தலைநகர் கொல்கத்தாவில் பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பாஜக தலைவர் அமித்ஷா பங்கேற்ற பேரணியில் நடந்த கலவரத்தில் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. கல்வீச்சில் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

கொல்கத்தாவில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்ற பிரமாண்ட பேரணி நடைபெற்றது. அப்போது தொண்டர்கள் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் உற்சாகமாக கலந்து கொண்டனர்.

West Bengal BJP President Amit Shahs roadshow in Kolkata after clashes broke out

42 நாடாளுமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய மேற்கு வங்க மாநிலத்தில் 7 வது கட்ட தேர்தல் நடக்கிறது. ஏற்கனவே 6 கட்டத் தேர்தல் முடிவடைந்ததை அடுத்து, அந்த மாநிலத்தில் மீதமுள்ள 9 தொகுதிகளுக்கு வரும் 19ம் தேதி தேர்தல் நடக்கிறது.

ஜாதவ்பூரில் அமித்ஷா கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், நேற்று ஜாய்நகர் தொகுதியில் கேனிங் என்ற இடத்தில் நடந்த மற்றொரு பிரச்சார கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். அப்போது, என்னை பிரச்சார கூட்டத்தில் பங்கேற்க விடாமல் தடுக்கலாம். ஆனால், பாஜக ஆட்சிக்கு வருவதை தடுக்க முடியாது என்றார்.

இருபிரிவினரிடையே மோதலால் பதற்றம்.. இலங்கையில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமல் இருபிரிவினரிடையே மோதலால் பதற்றம்.. இலங்கையில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமல்

இந்தநிலையில், கொல்கத்தாவில் இன்று மாலை நடந்த பிரமாண்ட பேரணியின் போது, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கறுப்புக் கொடிகளை காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, கல்வீச்சு சம்பவமும் நடந்தது. இதில், பலர் காயமடைந்தனர்.

தொண்டர்கள் அங்கும், இங்குமாகசிதறி ஓடியதால், பேரணியில் பரபரப்பு ஏற்பட்டது. சாலையோரத்தில் இருந்த வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதனையடுத்து, கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். இதனால், அந்த பகுதி போர்க்களம் போல் காட்சியளித்தது.

English summary
WestBengal: Clashes broke out in roadshow of BJP President Amit Shah in Kolkata after sticks were hurled at Shah’s truck.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X