• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திடீரென மூச்சு விட முடியவில்லை.. சப்-கலெக்டரின் கடைசி நிமிடங்கள்.. கலங்கி போன கொல்கத்தா!

|

கொல்கத்தா: எங்கே திரும்பினாலும் சப் கலெக்டர் ராய்தான் கண்ணுக்கு தெரிவார்.. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் ஓடுவார் இந்த ராய்.. பம்பரம் போல சுழன்று சுழன்று இந்த 5 மாசமாக வேலை பார்த்து வந்தவருக்கு தொற்று வந்துவிட்டது.. சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்து விட்டார் ராய்.. இவரது முழு பெயர் தேப்தத்தா ராய் என்பதாகும்!

  கண் கலங்கிய Mamata Banerjee | யார் இந்த Debdutta Ray? | Oneindia Tamil

  மேற்கு வங்காளம் மாநிலம் ஹோக்லி மாவட்டம் சந்தன்நகர் பகுதியில் துணை மாஜிஸ்திரேட்டாக வேலை பார்த்து வந்தவர்தான் தேப்தத்தா ராய்.. 38 வயதாகிறது.. கல்யாணமாகி ஒரு மகன் இருக்கிறான்.. அவனுக்கு 4 வயசு.

   west bengal bureaucrat debdatta ray dies due to covid

  சிவில் சர்வீஸ் அதிகாரியான இவர், கொரோனா தடுப்பு பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டார்.. குறிப்பாக, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பிரச்சனை அங்கு தலைதூக்கவும், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதில் ஆர்வம் காட்டினார்.

  அதாவது, அத்தொழிலாளர்களை ஹூக்ளிக்கு அழைத்து வருவது, அவர்கள் தங்குவதற்கு முகாம்களை அமைப்பது என பல வேலைகளை இழுத்து போட்டு செய்தார்.. இந்த கடினமான சூழ்நிலையிலும்கூட, மனிதாபிமானத்தோடு அப்பணிகளை கையாண்டார்.

  அப்போதே அனைவரின் கவனத்தையும் இவர் ஈர்த்துவிட்டார்.. சேவை பலராலும் பாராட்டப்பட்டது... மாநில முதல்வர் மம்தா பானர்ஜியும் இதை கவனித்து, பாராட்டினார்.. இந்த சமயத்தில்தான் ராய்க்கு கடந்த வாரம் உடம்பு சரியில்லாமல் போய்விட்டது... அதனால் கொரோனா டெஸ்ட் செய்து கொண்டார்... அப்போது, தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

  திணறும் அமெரிக்கா.. மோசமாகும் நிலை.. உலகம் முழுக்க ஒரே நாளில் 215,389 கொரோனா கேஸ்கள்.. பரபரப்பு

  இதையடுத்து அவர் வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.. ஆனாலும் நேற்று முன்தினம் உடம்பு ரொம்ப மோசமாகிவிட்டது.. மூச்சுவிட முடியவில்லை.. அதனால் உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, தீவிரமான சிகிச்சை தந்தும் காப்பாற்ற முடியவில்லை.. இது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. தேப்தத்தா ராய்க்கு முதல்வர் மம்தா பானர்ஜி தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து இருக்கிறார்.

  "வங்க மக்களுக்காக அவர் செய்த தியாகத்திற்கு மேற்கு வங்க அரசு சார்பாக வணக்கம் செலுத்துகிறேன். அவரது கணவரை தொடர்பு கொண்டு பேசி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தேன். அவரது ஆன்மா சாந்தியடையவும், இந்த இழப்பை தாங்கிக்கொள்ள அவரது குடும்பத்திற்கு பலத்தை வழங்குமாறும் இறைவனை வேண்டுகிறேன்" என்று மம்தா தெரிவித்துள்ளார்.

  இந்த அதிர்ச்சியில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் மீளவில்லை.. எங்கே திரும்பினாலும், அவர் ஓடி ஓடி உதவி செய்ததே ஞாபகத்துக்கு வருவதாக கண்ணீருடன் தெரிவித்து வருகின்றனர்.

  வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  west bengal bureaucrat debdatta ray dies due to covid
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X