For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மேடையில் கலகலப்பாக நடனம் ஆடிய மம்தா பானர்ஜி.. அதே ஸ்டேஜில் பாஜகவுக்கு கடும் வார்னிங்!

Google Oneindia Tamil News

கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி , இசை நிழச்சி ஒன்றில் பங்கேற்றதுடன் இசைக்கலைஞர்கள், பாடகர்கள் மற்றும் நடனக் கலைஞர்களுடன் இணைந்து நடனமாடினார். சிறிது நேரமாக நடனமாடினாலும் உற்சாகத்துடன் காணப்பட்டார். இன்னும் நான்கு மாதங்களில் தேர்தல் நடக்க உள்ள நிலையில் மம்தா அதே மேடையில் பாஜகவை வெளுத்து வாங்கினார்.

மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் பாஜகவுடன் கடும் மோதலில் இறங்கி உள்ள மம்தா பானர்ஜி, பாஜகவுக்கு எதிராக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் பாஜகவுடனான தனது தீவிரமான மோதலுக்கு நடுவே நேரம் ஒதுக்கி, இசைக்கலைஞர்கள், பாடகர்கள் மற்றும் நடனக் கலைஞர்கள் உட்பட பல நாட்டுப்புற கலைஞர்களை, முதல்வர் மம்தா பானர்ஜி கவுரவித்தார்.

நியூ ஜெர்சியில் ஓடும் ரயிலில் சிக்கிய இந்தியர்.. நேர்ந்த பயங்கரம்!நியூ ஜெர்சியில் ஓடும் ரயிலில் சிக்கிய இந்தியர்.. நேர்ந்த பயங்கரம்!

கலகலப்பு

கலகலப்பு

புகழ்பெற்ற சந்தால் நடனக் கலைஞர் பசாந்தி ஹெம்பிராமை முதல்வர் பாராட்டியபோது, அவர் மம்தாவை நடனம் ஆட அழைத்தார். அப்போது இசையும் ஒலித்தது. பின்னர் மம்தான சில ஸ்டெப் போட்டு நடனமாட முயற்சித்தார். இதனால் நிகழ்ச்சி கலகலப்பாக இருந்தது.

அனுமதிக்க மாட்டோம்

அனுமதிக்க மாட்டோம்

இந்த விழாவில் பாஜகவை எச்சரித்து மம்தா பேசுகையில் ,வங்காளத்தில் "குஜராத் வளர்ச்சி மாடலை" பயன்படுத்துவதாக பாஜக மீண்டும் மீண்டும் கூறுவதை வங்காளம் ஏற்காது. ஒரு போதும் குஜராத் மாடலை மேற்கு வங்கம் அனுமதிக்காது.

ஜெய் ஹிந்த்

ஜெய் ஹிந்த்

நேதாஜி எங்களுக்கு உலக புகழ்பெற்ற ஜெய் ஹிந்த் கொடுத்தார், பாங்கிம் சந்திரா தேசிய பாடல் வந்தே மாதரத்தை கொடுத்தார். ரவீந்திரநாத் தாகூர் தேசிய கீதத்தை கொடுத்தார்.. இவை அனைத்தும் வங்காள மண்ணிலிருந்து வந்தவை. வங்காளத்தை இழிவுபடுத்தும் முயற்சி மிக கடினமானது.

அனுமதிக்க மாட்டோம்

அனுமதிக்க மாட்டோம்

நான் நம்புகிறேன் ஒரு நாள், உலகம் முழுவதும் வங்காளத்திற்கு வணக்கம் தெரிவிக்கும். நோபல் பரிசு முதல் எல்லாமே வங்காளம் வாங்கி உள்ளது.. மேற்கு வங்காளத்தை குஜராத் மாடலாக மாற்ற நாங்கள் ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம், "என்று முதல்வர் மம்தா எச்சரித்தார்.

English summary
West Bengal Chief Minister Mamata Banerjee opened a music festival and even broke into a dance, in an interlude from the heavy-duty campaign for the state election in four months.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X