For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொல்கத்தாவில் மீண்டும் வெடித்தது மோதல்... பாஜகவினர் மீது போலீஸ் தடியடி

Google Oneindia Tamil News

கொல்கத்தா: மேற்கு வங்காளம் மாநிலத்தில் பாஜகவினருக்கும் போலீசாருக்கும் இடையே வெடித்த மோதலில் பலர் காயமடைந்தனர்.

மேற்கு வங்காளம் மாநிலத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அம்மாநிலத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய பின்னடைவை சந்தித்தது. கடந்த தேர்தலில் மேற்கு வங்காளத்தில் 2 தொகுதிகளை மட்டுமே பெற்ற பா.ஜ.க., இந்தத் தேர்தலில் 18 இடங்களை கைப்பற்றியது.

West Bengal: Clash broke out between BJP workers & police in Gangarampur

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, 22 இடங்களை கைப்பற்றியது. இருப்பினும், அம்மாநிலத்தில் தேர்தலுக்கு பின்னர் வெற்றி ஊர்வலங்கள் நடத்த கூடாது என முதலமைச்சர் மம்தா பானர்ஜி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில், தினஜ்பூர் மாவட்டத்துக்குட்பட்ட கங்காராம்பூர் பகுதியில் இன்று வெற்றி ஊர்வலம் நடத்திய பாஜகவினருக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. மேற்கு வங்காளம் மாநிலத்தின் பாஜக தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலிப் கோஷ் தலைமையில் நடைபெற்ற இந்த ஊர்வலத்துக்கு போலீசார் தடை விதித்திருந்தும் தடையை மீறி இந்த ஊர்வலம் நடத்தப்பட்டதால் அதை தடுத்தி நிறுத்திய போலீசார் மீது பாஜகவினர் சிலர் தாக்குதல் நடத்தியதாகவும் அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்ததாகவும் கூறப்படுகிது.

இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த பாஜக தலைவர் திலிப் கோஷ், 'மேற்கு வங்காளத்தில் எங்களது வாக்கு வங்கி 40.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. பாராளுமன்ற தேர்தலில் எங்கள் வேட்பாளர்கள் 18 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.

எனவே, எங்களை கண்டு மாநில அரசு அஞ்சுகிறது. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக நாங்கள் நடத்தும் ஊர்வலங்களை தடுக்க போலீசாரை பயன்படுத்துகிறது. போலீசார் அனுமதி அளிக்க மறுத்தாலும் நாங்கள் ஊர்வலங்களை தொடர்ந்து நடத்துவோம் என்று குறிப்பிட்டார்.

இதே போல், கொல்கத்தாவில் கடைசிக் கட்ட தேர்தல் பிரச்சாரத்தின் போது, பாஜக தேசியத் தலைவரான அமித்ஷா நடந்திய பிரமாண்ட பேரணியின் போது, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கறுப்புக் கொடிகளை காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, கல்வீச்சு சம்பவமும் நடந்தது. இதில், பலர் காயமடைந்தனர்.

தொண்டர்கள் அங்கும், இங்குமாக சிதறி ஓடியதால், பேரணியில் பரபரப்பு ஏற்பட்டது. சாலையோரத்தில் இருந்த வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதனையடுத்து, கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். இதனால், அந்த பகுதி போர்க்களம் போல் காட்சியளித்தது. இதனையடுத்து, ஒரு நாளுக்கு முன்னதாக, தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது. இந்தநிலையில், தடையை மீறி வெற்றி ஊர்வலம் நடத்தப்பட்ட நிலையில், போலீசாருக்கும், பாஜக வினருக்கும் இடையே மோதல் வெடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

English summary
West Bengal: Clash broke out between BJP workers & police in Gangarampur,South Dinajpur after police allegedly stopped the rally of BJP MP Dilip Ghosh in the area. One police sub inspector & two civic volunteers who were injured in the clash have been admitted to a nearby hospital.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X