For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக மம்தா பானர்ஜி பிரம்மாண்ட நடை பயணம்.. ஸ்தம்பித்தது கொல்கத்தா

Google Oneindia Tamil News

Recommended Video

    மம்தா பானர்ஜி பிரம்மாண்ட நடை பயணம்.. ஸ்தம்பித்தது கொல்கத்தா-வீடியோ

    கொல்கத்தா: அசாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரம்மாண்டமான பேரணி நடத்தினார். இதனால் மொத்த கொல்கத்தா நகரமும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களால் ஸ்தம்பித்து போனது.

    அசாம் மாநில மக்களின் குடியுரிமையை உறுதி செய்யும் தேசிய குடிமக்கள் இறுதி பட்டியல் கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி வெளியானது. இதில் மொத்தம் 3.29 கோடி பேர் விண்ணப்பத்த நிலையில், 19 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு மக்களிடையே கவலையும் பதற்றமும் காணப்படுகிறது.

     West Bengal CM Mamata Banerjee leads a protest march against National Register of Citizens

    வங்கதேசத்தில் இருந்து ஏராளமானோர் ஊடுருவிய காரணத்தால் நாட்டிலேயே அஸ்ஸாமில் தான் தேசிய குடிமக்கள் பதிவேடு பராமரிக்கப்படுகிறது. இந்த பட்டியலில் இடம் பெறாதவர்கள் இந்தியர்களாக நீடிக்க முடியாது என்பதால் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

    இந்நிலையில் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரம்மாண்ட பேரணியை பிற்பகல் 3மணி அளவில் துவக்கினார். தொண்டர்கள் படை சூழ, கொல்கத்தா நகரின் வடக்கு எல்லைப்பகுதியான சிந்தி மோரேவில் இருந்து துவக்கினார் மம்தா.

    பெரும் முழக்கங்களுக்கு நடுவே மம்தாவின் நடைப்பயணம் 5 கிலோமீட்டர் கடந்து ஷியாம் பஜாரில் நிறைவு பெற்றது. இந்த போராட்டத்தின் போது தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக பதாகைகளை திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் வைத்திருந்தனர். பல ஆயிரம் பேர் பங்கேற்றதால் மொத்த கொல்கத்தாவும் ஸ்தம்பித்து போனது.

    English summary
    West Bengal Chief Minister and Trinamool Congress Chief Mamata Banerjee leads a protest march against National Register of Citizens
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X