For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மே.வ. மாநிலத்தின் பெயரை 'பங்களா' அல்லது "போங்கோ" என மாற்ற அமைச்சரவை முடிவு

By Mathi
Google Oneindia Tamil News

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை வங்கமொழியில் "பங்களா" அல்லது "போங்கோ" என மாற்றவும் ஆங்கிலத்தில் பெங்கால் என திருத்தவும் அம்மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

மேற்கு வங்கத்தின் பெயர் ஆங்கிலத்தில் West Bengal என வருவதால் அகர வரிசைப்படி கடைசி இடத்தில் இருக்கிறது. இதனால் அனைத்து விஷயங்களிலும் கடைசியாகவே மேற்கு வங்கத்தை அழைக்கிறார்கள் என்பது அம்மாநிலத்தின் நீண்டகால கவலை.

West Bengal decides to change name either Bangla or Bongo

கடந்த 2011-ம் ஆண்டு இது தொடர்பாக ஒரு அனைத்துக் கட்சிக் கூட்டமும் கூட்டப்பட்டது. அக்கூட்டத்தில் பங்களா, பஸ்சிம் பங்கா, பங்க பிரதேஷ், பங்கபூமி ஆகிய பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு கடைசியாக பஸ்சிம் பங்கா என்ற பெயர் தேர்வு செய்யப்பட்டது.

ஆனால் அது நடைமுறைக்கு வரவில்லை. இந்த நிலையில் இன்று அம்மாநில அமைச்சரவை கூடி மாநிலத்தின் பெயரை மாற்றுவது குறித்து ஆலோசித்தது.

இதில் மேற்கு வங்கத்தின் பெயரை வங்க மொழியில் பங்களா அல்லது போங்கோ என மாற்றுவது என்றும் ஆங்கிலத்தில் 'பெங்கால்' என திருத்தவும் முடிவு செய்யப்பட்டது. இதன் மூலம் இந்திய மாநிலங்கள் வரிசையில் West Bengal என கடைசியில் இருந்த மேற்கு வங்கம் இனி Bengal என முதல் வரிசைக்கு வந்துவிடும்

English summary
West Bengal cabinet decided to change name of West Bengal, will be either Bangla or Bongo. In English it will be Bengal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X