For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மேற்கு வங்க சட்டசபை தேர்தல்: அனைத்து கருத்துக்கணிப்புகளிலும் மம்தா கட்சிக்கு முன்னிலை

By Jeyarajaseker A
Google Oneindia Tamil News

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளின் தொடர்ச்சியாக தேர்தல் முடிவுகள் வெளிவர இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் மற்றுமொரு கருத்துக் கணிப்பு முடிவுகள் வந்துள்ளது.

மேற்கு வங்கத்தில் இம்முறை நடைபெறும் தேர்தல் கொஞ்சம் வித்தியாசமான தனித்துவமான தேர்தல் என்று கூறலாம் கேரளாவில் எதிரெதிர் துருவங்களாக களம் காங்கிரசும் இடதுசாரிகளும் தங்களது பொது எதிரியான மம்தாவின் திரிணமுல் காங்கிரசை வீழ்த்த கை கோர்த்துள்ளன. மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு முன்னர் பல கருத்துக் கணிப்புகள் வெளிவந்தன. இவற்றில் யார் வெற்றியை பெற போகிறார்கள் யார் மண்ணைக் கவ்வப் போகிறார்கள் என்பது இன்னும் ஐந்தே நாட்களில் தெரிந்துவிடும்.

West Bengal election 2016: A look at all pre-poll survey results

மேற்கு வங்க சட்டசபை தேர்தல் 2016. கருத்துக் கணிப்புகள் (மொத்த இடங்கள் 294)

Parties தி.காங் இடது காங்கிரஸ் பாஜக பிற
ஏபிபி&ஏ சி நீல்சன் (பிப்ரவரி 2016)1* 182 இ.+கா.107 - 5
இந்தியா டி வி சி வோட்டர் (மார்ச்2016) 156 114 13 4 7
இ டி வி பங்களா* (மார்ச் 16) 201 34 27 1 3
ஏபிபி&ஏ சி நீல்சன் 2* (மார்ச் 2016) 178 இ.சா.+கா. 110 - 1 5
24 கந்தா -GFK (மார்ச் 2016) 200 இ.சா.+கா.90 - 1 3
டைம்ஸ் நவ் – இந்தியா டி வி – சி வோட்டர் (ஏப்ரல் 2016) 160 106 21 4 3

*ஏபிபி மற்றும் ஏ சி நீல்சன் பிப்ரவரி மாதம் நடத்திய கருத்துக் கணிப்பில் இடது சாரிகள் மற்றும் திரிணமுல் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே கூட்டணி ஏற்படாத பட்சத்தில் திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கு 197 இடங்கள் வரை கிடைக்கும் என்றும் இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கு முறையே 74 மற்றும் 16 இடங்கள் கிடைக்கலாம் என்றும் கணிக்கப் பட்டிருந்தது.

*28 இடங்களின் முடிவுகள் மிக எளிதாக கணிக்கும்படி இருந்தது என்று இ டி வி பங்களா கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன

*ஏபிபி மற்றும் ஏ சி நீல்சன் குழுவினர் இரண்டாவது முறையாக மார்ச் மாதம் 29 ம் தேதி நடத்திய கருத்துக் கணிப்பில் இடது சாரிகள் மற்றும் திரிணமுல் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே கூட்டணி ஏற்படாத பட்சத்தில் திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கு 200 இடங்கள் வரை கிடைக்கும் என்றும் இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கு முறையே 75 மற்றும் 14 இடங்கள் கிடைக்கலாம் என்றும் கணிக்கப் பட்டிருந்தது.

English summary
All the pre-poll surveys that were conducted ahead of the Bengal election and the results they have predicted. On May 19, we will see who hit the bull's eye or who went wide off the target.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X