• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொல்கொத்தாவில் சோகம்...பிச்சை எடுத்து வாழும் மேற்கு வங்க முன்னாள் முதல்வரின் மைத்துனி

Google Oneindia Tamil News

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் கந்தல் துணியோடு, சாலையோரத்தில் திரிந்த பெண் ஒருவரை அங்கிருந்த மக்கள் அடையாளம் கண்டு மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர். அம்மாநில முன்னாள் முதல்வர் புத்ததேப் பட்டாச்சார்யாவின் உறவினர் இவர் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது... இவரின் உருக்கமான கதை அம்மாநில கம்யூனிஸ்ட் தலைவர்களின் எளிமைக்கு எடுத்துக்காட்டாக மாறியுள்ளது.

கொல்கத்தாவிற்கு வெளியே இருக்கும் பெரிய நகரங்களில் நார்த் 24 பரகான்ஸ் மிக முக்கியமான நகரங்களில் ஒன்று. சென்னைக்கு வெளியே இருக்கும் புறநகர் நகரங்களுக்கு இணையான முன்னேற்றம் கொண்ட பகுதி இது. நீண்ட அழகான சாலைகள், வங்க மொழியில் கூவும் நடத்துனர்களின் சத்தத்தோடு சீறும் பேருந்துகள் என்று மிகவும் முன்னேறிய பகுதியாகும். இங்குதான் சாலையோரத்தில் நீள நிற கிழித்த நைட்டி அணிந்து சுற்றித்திரிந்த அந்த பெண் கண்டுபிடிக்கப்பட்டார்

முடி நரைத்து, உடைகள் கிழிந்து சாலை ஓரத்தில் பாராபஜார் அருகே அந்த பெண் பிச்சை எடுத்து, கிடைத்த உணவை வாங்கி சாப்பிட்டுக்கொண்டு இருந்தார். முதலில் இவரை சாதாரண பிச்சக்காரப்பெண் என்றுதான் அங்கிருந்தவர்கள் நினைத்து இருக்கிறார்கள். ஆனால் இவரை அடையாளம் கண்ட அப்பகுதி முக்கியஸ்துவர்களும், பத்திரிக்கையாளர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

மேற்கு வங்கத்தில் பாஜகவிற்கு மேலும் சறுக்கல்.. திரிணாமுல் காங்கிரஸில் இணைந்த பாஜக மூத்த எம்எல்ஏ! மேற்கு வங்கத்தில் பாஜகவிற்கு மேலும் சறுக்கல்.. திரிணாமுல் காங்கிரஸில் இணைந்த பாஜக மூத்த எம்எல்ஏ!

அதிர்ச்சி

அதிர்ச்சி

அந்த பெண் வேறு யாரும் கிடையாது.. மேற்கு வங்கத்தின் முன்னாள் முதல்வர் புத்ததேப் பட்டாச்சார்யாவின் மனைவியின் சொந்த தங்கை. அதாவது புத்ததேப் பட்டாச்சார்யாவின் சொந்த மைத்துனி. மேற்கு வங்கத்தை 10 ஆண்டுகள் ஆண்ட, மேற்கு வங்கத்தை வெறும் கம்யூனிஸ மாநிலம் என்பதை தாண்டி அங்கு பல புதிய தொழிற்சாலைகளை கொண்டு வந்து, தொழிற்புரட்சிகளை ஏற்படுத்திய புத்ததேப் பட்டாச்சார்யாவின் வீட்டிலேயே இருந்த பெண்.. இப்போது சாலையில் பிச்சை எடுத்துக்கொண்டு இருக்கிறார்.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

அந்த பெண்ணின் பெயர் ஐரா பாசு. இவர் படிக்காமல், வேலைவாய்ப்பு இல்லாமல் இப்படி ஆகவில்லை. ஐராபாசு பிஎச் டி படித்தவர். ஆம் வைராலஜியில் பிஎச் டி படித்தவர். சிறப்பான ஆங்கிலம் மற்றும் வங்காள புலமை கொண்டவர். அதோடு டென்னிஸ், கிரிக்கெட் போட்டிகளில் மாநில அளவில் ஆடியவர். பிஎச் டி முடித்தும் கூட பெரிய இடங்களில் வேலை பார்க்க விருப்பம் இன்றி பள்ளி ஒன்றில் சிறிய அளவில் குறைந்த வருமானத்திற்கு ஆசிரியராக பணி புரிந்து வந்தார் இவர். அங்கு பிரியாநாத் பெண்கள் பள்ளியில் இவர் குறைந்த சம்பளத்திற்கு பணியாற்றினார்.

வாய்ப்பு

வாய்ப்பு

இவர் பள்ளியில் இருந்தே போதே பல கல்லூரிகளில் இருந்து பெரிய அளவில் உயர் பொறுப்பில் வேலைகள் வந்தன. முதல்வரின் உறவினர் என்பதால் வாய்ப்புகள் தேடி வந்தன. ஆனால் முடிந்த அளவு தான் என்பதை வெளிக்காட்டாமல் லைம் லைட்டிற்கே வரமால் ஓரமாக இருந்து வந்தார் ஐரா பாசு. பல வாய்ப்புகள் வந்தும் கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கும் மேலாக ஒரே பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றி உள்ளார். எந்த ஒரு நொடியிலும் ஆடம்பரத்தை விரும்பாமல் எளிமையாக வாழ்ந்து இருக்கிறார்.

ரிட்டையர்

ரிட்டையர்

2009ல் இவர் பள்ளியில் இருந்து ஓய்வு பெற்ற பின் கார்டங்க் என்ற மேற்கு வங்க நகரத்திற்கு குடிபெயர்ந்தார். அதன்பின் பெரிதாக இவர் எங்கும் வேலை பார்க்காமல் வீட்டிற்கு உள்ளேயே முடங்கினார். அதோடு இவர் பள்ளியில் இருந்து பென்சன் பெறவும் விரும்பவில்லை. பள்ளியில் இருந்து இவருக்கு பென்சன் கொடுக்க முயன்றுள்ளனர். ஆனால் கூட இவர் அதற்கான ஆவணங்கள் எதையும் கொடுக்கவில்லை. இதனால் அவர் ஓய்வு பெற்ற பின் ஒரு ரூபாய் கூட பென்சனாக பெறவில்லை.

மாயம்

மாயம்

இரண்டு வருடங்களுக்கு முன் திடீரென மாயமான இவர் இப்போதுதான் நார்த் 24 பரகான்ஸ் பகுதியில் பிச்சை எடுக்கும் நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். யாரிடமும் தெரிவிக்காமல், முன்னாள் முதல்வரின் உறவினர் என்பதை எல்லாம் மறைத்து வாழ்ந்து வந்த ஐரா பாசு, தான் விருப்பப்பட்டு இப்படி பிச்சை எடுத்து வாழ்ந்து வருகிறார். இவர் பிச்சை எடுப்பது ஏற்கனவே தெரிந்த சிலர் அவ்வப்போது இவரை வந்து பார்த்துவிட்டு செல்வது வழக்கம். இவரின் முன்னாள் மாணவர்கள் பலர் நேரில் வந்து இவரை விசாரித்து விட்டும் சென்றுள்ளனர்.

 ஐரா பாசு

ஐரா பாசு

ஆனால் யாருடனும் இவர் செல்லாமல் தொடர்ந்து சாலை ஓரத்திலேயே வசித்து வந்துள்ளார். தான் ஒரு விஐபி, முன்னாள் முதல்வரின் மைத்துனி என்பதை எங்கும் வெளிப்படுத்தாமல் ரேடாரில் மறைந்து வாழ்ந்து வந்து இருக்கிறார். இந்த விஷயம் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வரும் நிலையில் அப்பகுதி அரசு அதிகாரிகள் மூலம் முனிசிபாலிட்டி நிர்வாகம் இவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர். இவருக்கு புதிய உடை வாங்கிக்கொடுத்து அங்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

முன்னாள் முதல்வர்

முன்னாள் முதல்வர்

முன்னாள் முதல்வர் ஒருவரின் நெருங்கிய உறவினர் ஒருவர் இப்படி சாலை ஓரத்தில் பிச்சை எடுப்பது அம்மாநிலத்தை உலுக்கி உள்ளது. மேற்கு வங்கத்தின் கடைசி கம்யூனிஸ்ட் முதல்வர் என்று வர்ணிக்கப்படுபவர் புத்ததேப் பட்டாச்சார்யா. இவரின் ஆட்சியோடுதான் மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்டுகளின் 34 வருட ஆட்சி முடிவிற்கு வந்தது. ஜோதி பாசுவிற்கு பின் முதல்வராக பதவி ஏற்ற இவர் முதல் 5 வருடம் மிக சிறப்பாக ஆட்சி புரிந்து மாநிலத்தை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றார். ஆனால் இரண்டாம் டேர்ம் ஆட்சியில் மக்களுக்கு எதிரான நிறைய சட்டங்களை கொண்டு வந்தார்.

 போராட்டம்

போராட்டம்

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொழிற்சாலைகளை கொண்டு வந்தார். இதற்கான நில அபகரிப்பு பணிகளில் மக்களின் எதிர்ப்பை சம்பாதித்தார். 2007ல் நந்திகிராமில் கெமிக்கல் தொழிற்சாலை கொண்டு வர இவர் முயன்ற நிலையில் அதற்கு எதிராக மக்கள் போராடினார்கள். இதில் நடந்த துப்பாக்கி சூட்டில் 14 பேர் போலீசார் மூலம் கொல்லப்பட்டனர். புத்ததேப் பட்டாச்சார்யாவின் அரசியல் அஸ்தமனம் அன்று தொடங்கியது. இந்த துப்பாக்கி சூட்டை ஆதரித்து இவர் பேசியது பெரிய சர்ச்சையானது.

முடிந்தது

முடிந்தது

அதன்பின் சிங்கூர் நேனோ கார் தொழிற்சாலைக்கு எதிராக அப்பகுதி மக்களோடு சேர்ந்து மமதா பானர்ஜி போராடி புதிய மக்கள் தலைவராக உருவெடுத்தார். தொடர்ந்து மக்கள் போராட்டங்களால் மதிப்பை இழந்த புத்ததேப் பட்டாச்சார்யா 2000 முதல் 2011 வரை மேற்கு வங்கத்தை ஆண்ட நிலையில் 2011 சட்டசபை தேர்தலில் மமதா பானர்ஜியிடம் வீழ்ந்தார். அதோடு மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட் ஆட்சி முடிவிற்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
West Bengal Ex CM Buddhadeb Bhattacharya's Wife's sister begs in the road of Kolkata. After photos went viral she got admitted in the hospital.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X