For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'நெவர் கிவ் அப்' நடுகடலில் 5 நாள்கள் உணவில்லாமல் கட்டையில் தத்தளித்தும்.. நம்பிக்கை இழக்காத மீனவர்

Google Oneindia Tamil News

கொல்கத்தா: படகு கவிழ்ந்து நடுகடலில் தவறி விழுந்த மேற்கு வங்க மீனவர் ஒருவர், உயிரை காப்பாற்றுவதற்காக மூங்கில் கட்டையை பிடித்துக்கொண்டு 5 நாட்கள் உணவு தண்ணீர் இன்றி உயிருக்கு போராடினார். அவருடன் வந்த நண்பர்கள் அனைவரும் நம்பிக்கை இழந்து கட்டையை விட்டு உயிரிழந்துவிட்ட நிலையில் நம்பிக்கை இழக்காத, அவர்.5வதுநாள் வங்கதேச கப்பல் மூலம் உயிருடன் மீட்கப்பட்டார்.

அஜித் விவேகம் படத்தில் ஒரு பஞ்ச் டைலாக் சொல்வார்..நீ தோத்துட்ட தோத்துட்டனு உன் முன்னாடி நிண்ணு அலற்னாலும் நீயா ஒத்துக்குற வரைக்கும் எவனாலும் எப்பவும் உன்ன ஜெயிக்க முடியாது" என கூறுவார்.

அப்படித்தான் நடுக்கடலில் கட்டையை மட்டும் பிடித்துக்கொண்டு தவித்த மேற்கு வங்க மீனவர் ஒருவரின் உயிரை எடுக்க எமன் ஐந்து நாள்காக பாசக்கயிற்றோடு விரட்டி வந்துள்ளார்.

உயிர் பிழைந்தார்

உயிர் பிழைந்தார்

இந்நிலையில், மேற்க வங்க மீனவர் ஒருவர், தன்னோடு உள்ளவர்கள் எல்லாம் உயிரிழந்த போதும், தன்னால் பிழைக்க முடியும் என்று உறுதியாக நம்பி போராடியதால், ஐந்து நாளில் வங்கதேச கப்பல் மூலம் உயிர் பிழைத்துள்ளார்.

படகு கவிழ்ந்தது

படகு கவிழ்ந்தது

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மீனவர் ரபீந்திரநாத் தாஸ். இவர் தனது நண்பர்கள் 14 பேருடன் கடந்த ஜூலை 4ம் தேதி கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றுள்ளார். கடலில் பேரலைகள் காரணமாக அசாதாரண சூழல் ஏற்பட்டது. இதனால் அவரது படகு கவிழ்ந்தது. இதனையடுத்து எரிபொருள் கேன்களை மூங்கில் கட்டைகளுடன் இணைத்துக் கட்டி மிதவையை ரபீந்திரநாத் தயாரித்துள்ளார்.

மருமகனும் உயிரிழப்பு

மருமகனும் உயிரிழப்பு

இதன் மூலம் உயிரை கையில் பிடித்து போராடி வந்த மீனவர்கள் ஒவ்வொரு நாளும் நீரில் மூழ்கி உயிரிழந்த வண்ணம் இருந்தனர். கடைசியாக மூங்கில் கட்டையை பிடித்துகொண்ட ரபீந்திரநாத்தும், அவரது மருமகனும் 5 நாட்களாக உயிருக்காக போராடியுள்ளார்கள். இறுதியில் அவரது மருமகனும் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

வங்க கப்பல் மீட்டது

வங்க கப்பல் மீட்டது

கடைசியில் ரபீந்திரநாத் மட்டும் உயிருக்கு போராடுவதை வங்கதேசத்தைச் சேர்ந்த கப்பல் மாலுமிகள் கண்டனர். அவரை உடனடியாக மீட்ட அவர்கள் கொல்கத்தா மருத்துவமனையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இப்போது ரவீந்திரநாத் உயிருடன் இருக்கிறார்.

மருமகன் கடைசி நொடியில் சாவு

மருமகன் கடைசி நொடியில் சாவு

இது குறித்து ரபீந்திரநாத் கூறுகையில், படகு கவிழ்ந்ததும் நான் உடனே தண்ணீரில் குதித்தேன். 5 நாட்களாக நான் எதுவும் சாப்பிடவில்லை. மழையும் பெரும் அலையும் என்னை மிரட்டியது. மழை பெய்யும் போது அந்த தண்ணீரைக் குடித்துக்கொண்டேன். நானும் எனது மருமகனும் ஒன்றாகவே மிதந்து உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தோம். லைப் ஜாக்கெட்டை நான் அவரிடம் கொடுத்தேன். ஆனால் அவர் மிகவும் பயந்து போயிருந்தார். ஒரு நாள் முழுவதும் அவரை என் தோளில் தாங்கினேன்.ஆனால் நான் காப்பாற்றப்படுவதற்கும் சில மணி நேரத்துக்கும் முன்பாக அவரும் மூழ்கி இறந்து போனார்" இவ்வாறு வேதனையுடன் கூறினார்.

English summary
West Bengal fisherman Rescued in sea after he held on to fuel drums for 5 days, but unfortunately 13 fishermen died, who came with him
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X