For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மேற்கு வங்கத்தில் ரத யாத்திரைக்கு பிளான் போட்ட அமித் ஷா.. உள்ளேயே வர கூடாது என்ற மமதா பானர்ஜி!

மேற்கு வங்கத்தில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ரத யாத்திரை நடத்த அம்மாநில அரசு தடை விதித்து இருக்கிறது.

Google Oneindia Tamil News

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ரத யாத்திரை நடத்த அம்மாநில அரசு தடை விதித்து இருக்கிறது.

பொதுவாக பாஜக ஆளாத மாநிலங்களில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால், அங்கு, பாஜக ரதயாத்திரை நடத்துவது வழக்கம். இந்த ரதயாத்திரையால் பொதுவாக பல இடங்களில் கலவரம் நடந்து இருக்கிறது.

அதே சமயம் அரசியல் ரீதியாக இந்த ரத யாத்திரை பாஜகவிற்கு பெரிய பலனை அளித்து உள்ளது. இந்த நிலையில்தான் மேற்கு வங்கத்தில் கூச்பேகர் பகுதியில் ரத யாத்திரை நடத்த பாஜக தேசிய தலைவர் அமித் ஷா திட்டமிட்டு இருந்தார்.

அனுமதி மறுப்பு

அனுமதி மறுப்பு

ஆனால் அம்மாநில அரசு இதற்கு அனுமதி மறுத்தது. அமித் ஷா ரத யாத்திரை நடத்த திட்டமிட்டு இருந்த அதே நாளில் வேறு எதுவும் கூட்டமும் நடத்த கூடாது என்று தடை விதித்தது. ரத யாத்திரை மதக்கலவரங்களை தூண்டும் என்பதால் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி அரசு இந்த தடையை விதித்தார்.

வழக்கு தொடுத்தது

வழக்கு தொடுத்தது

இதையடுத்து பாஜக இந்த தடைக்கு எதிராக கொல்கத்தா ஹைகோர்ட் சென்றது. அதன்படி அமித் ஷா ரத யாத்திரை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறியது. ஆனால் மேற்கு வங்க அரசு ஹைகோர்ட்டிலும் உறுதியாக இந்த ரத யாத்திரைக்கு அனுமதி மறுத்தது.

என்ன விளக்கம்

என்ன விளக்கம்

ஹைகோர்ட்டிலும் மேற்கு வங்க அரசு இதே காரணத்தை கூறியது. இதற்கு ஹைகோர்ட், இந்த ரத யாத்திரையால் பிரச்சனை ஏற்பட்டால் அதற்கு பாஜக பொறுப்பேற்குமா என்று கேள்வி எழுப்பியது. அதற்கு பாஜக அது மாநில அரசின் வேலை, சட்ட ஒழுங்கை மாநில அரசுதான் காக்க வேண்டும் என்று மறுப்பு தெரிவித்தது.

 பாஜக ஏமாற்றம்

பாஜக ஏமாற்றம்

இதனால் ஹைகோர்ட்டும், பாஜகவின் ரத யாத்திரைக்கு தடை விதித்தது. இதனால் பாஜக பெரிய ஏமாற்றத்தை சந்தித்துள்ளது. மேற்கு வங்கத்தில் ரத யாத்திரை நடத்துவதன் மூலம் பெரிய பலனை பெறலாம் என்று பாஜக நினைத்தது நிறைவேறாமல் போய் இருக்கிறது.

English summary
West Bengal CM Mamata Banerjee denies permission 'Rath Yatra' planned by Amit Shah.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X