For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரஜினிகாந்தின் அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கும்.. மேற்கு வங்க ஆளுநர் பரபர தகவல்!

Google Oneindia Tamil News

கொல்கத்தா: ரஜினிகாந்துக்கு மக்கள் செல்வாக்கு உள்ளது என மேற்கு வங்க ஆளுநர் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்துக்கு சின்னக் குழந்தை முதல் பெரியவர்கள் வரை ரசிகர்கள் இருப்பது அனைவரும் அறிந்த விஷயமே. அதனால்தான் அவரது பேச்சுக்கள் எதுவாக இருந்தாலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

தமிழகத்தில் ஒரு சில அரசியல்வாதிகள் ரஜினியின் அரசியல் பிரவேசத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தன்கர் கொல்கத்தாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் பேட்டி அளித்தார்.

இந்தியாவுக்கு புதிய கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள், குருத்வாராக்கள் தேவை இல்லை- கார்த்தி சிதம்பரம்இந்தியாவுக்கு புதிய கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள், குருத்வாராக்கள் தேவை இல்லை- கார்த்தி சிதம்பரம்

லட்சக்கணக்கான ரசிகர்கள்

லட்சக்கணக்கான ரசிகர்கள்

அவரிடம் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அவர் கூறுகையில் ரஜினிகாந்துக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவர்களில் நானும் ஒருவன்.

முறியடித்தல்

முறியடித்தல்

அவரது ஸ்டைல், நடிப்பு இவை எனக்கு ரொம்ப பிடிக்கும். ரஜினியை பிடிக்காதவர்கள் யாரேனும் இருப்பார்களா என்ன? அவரது சாதனையை யாராலும் முறியடிக்கவும் முடியாது, மறுக்கவும் முடியாது.

கணிக்க முடியாது

கணிக்க முடியாது

அண்மையில் வெளியான அவரது படங்களை நான் பார்த்தேன். அவர் அரசியலுக்கு வரவுள்ளதையும் பத்திரிகைகள் மூலம் தெரிந்து கொண்டேன். அவர் அரசியலுக்கு வந்தால் அவரது எதிர்காலம் எப்படி இருக்கும் என என்னால் கணிக்க முடியாது.

குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

ஆனால் அவருக்கு மக்கள் செல்வாக்கு உள்ளது. இதைவிட வேறு என்ன வேண்டும்? என்று கூறிய ஜெகதீப், முதல்வர் மம்தா பானர்ஜி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

English summary
West Bengal Governor Jagdeep Dhankhar says that Rajinikanth has people's influence. I am one of the fan of him.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X