For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மேற்கு வங்கத்தில் 10 கோடி பேருக்கு 2021 ஜூன் வரை இலவச ரேசன் பொருட்கள் - மம்தா பானர்ஜி

மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். 10 கோடி மக்கள் இதனால் பயனடைவார்கள் என்றும் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் தீவிரவமடைந்துள்ளது. எப்போது இந்த நோய் கட்டுக்குள் வரும், இந்த நோய்க்கு மருந்து எப்போது கண்டுபிடிப்பார்கள் என்றே யாராலும் கணிக்க முடியவில்லை. இந்த நிலையில் நாடு முழுவதும் ஆறாம் கட்ட ஊரடங்கு சில தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டுள்ளது.

West Bengal govt extends free ration under state scheme till June 2021

இந்த லாக்டவுன் மற்றும் அன்லாக் பற்றி இன்று மாலை பேசிய பிரதமர் மோடி, கொரோனா வைரஸ் காலத்தில் யாரும் பசியோடு இருக்கக்கூடாது என்றும் கூறினார். கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் நவம்பர் 30ஆம் தேதி வரை இலவச ரேசன் பொருட்கள் வழங்கப்படும் என்று கூறினார்.

மோடியின் அறிவிப்புக்குப் பிறகு மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன்படி நாளை முதல் தனியார் பேருந்துகள் ஓடத் தொடங்கும்.

மேற்கு வங்காளத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் வராததால் ஜூலை 1ஆம் தேதி வரை அம்மாநிலத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. என்றாலும் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் சேவை, ஜிம், மால்கள் போன்ற சிலவற்றிக்கு தடைகள் நீக்கப்படவில்லை. பேருந்து போக்குவரத்து போன்றவைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. தனியார் பேருந்துகள்

இந்நிலையில் பொதுமக்கள் காலையில் 5.30 மணி முதல் 8.30 மணி வரை வாக்கிங் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும்.

அடுத்தடுத்து பண்டிகைகள் என்பதால் தீபாவளி வரை ரேசனில் இலவச உணவு பொருள்கள்: மோடியின் முழு உரை! அடுத்தடுத்து பண்டிகைகள் என்பதால் தீபாவளி வரை ரேசனில் இலவச உணவு பொருள்கள்: மோடியின் முழு உரை!

திருமண விழாவில் 50 பேர் கலந்து கொள்ளவும், இறுதிச் சடங்கில் 25 பேர் கலந்து கொள்ளவும் அனுமதிக்கப்படுவார்கள் என்று மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

சீனா விவகாரம் வெளியுறவு விவகாரம் சம்பந்தப்பட்டது என்றாலும் அரசின் நடவடிக்கைகளுக்கு மாநில அரசு துணை நிற்கும் என்று தெரிவித்தார்.

மேற்கு வங்காளத்தில் 2021ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. 2011,2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் பெரும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து முதல்வரானார் மம்தா பானர்ஜி. மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டு வருகிறார் மம்தா பானர்ஜி.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளதோடு மக்களுக்காக பல இலவச திட்டங்களை அறிவித்துள்ளதோடு இலவச ரேசன் பொருட்களை 2021 ஜூன் மாதம் வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.

Coronavirus in India LIVE: உலகளவில் கொரோனா பாதிப்பு 90 லட்சத்தை தாண்டியது

English summary
West Bengal Chief Minister Mamata Banerjee has extended free ration under the state scheme till June next year. Her statement came soon after Prime Minister Narendra Modi announced free food grains to 80 crore people, India's poorest, till November end.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X