For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மே.வங்கத்தில் மோசடி வழக்கில் கலெக்டர் கைது - தமிழரான போலீஸ் கமிஷனருக்கு உடனே டிரான்ஸ்பர்!

By Mathi
Google Oneindia Tamil News

sp jayaraman
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் மோசடி வழக்கில் மாவட்ட ஆட்சியரை கைது செய்ததற்காக தமிழரான போலீஸ் கமிஷனரை அம்மாநில அரசு உடனே இடமாற்றம் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தின் சிலிகுரி ஆட்சியராக இருப்பவர் கோதால கிரண்குமார். இவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். சிலிகுரி ஆட்சியராக பொறுப்பேற்பதற்கு முன்பு இவர் மற்றொரு துறையில் தலைமை அதிகாரியாக இருந்தார்.

அப்போது அரசியல்வாதிகளுடன் இணைந்து ரூ200 கோடி மோசடியில் கிரண்குமார் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ ருத்ரநாத் பானர்ஜியும் சிக்கினார். இதைத் தொடர்ந்து சிலிகுரி எஸ்.பி.யான ஜெயராமன் (தமிழகத்தைச் சேர்ந்தவர்), ஆட்சியர் கிரண்குமாரிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தி கைது செய்தார்.

ஆனால் இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட உடனேயே கொல்கத்தாவில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை செயலர் சஞ்சய் மித்ரா, எங்களிடம் கலந்து ஆலோசிக்காமலேயே எஸ்.பி. ஜெயராமன் இந்த நடவடிக்கையை மேற்கொண்டார். அவரை உடனே அந்த பணியில் இருந்து விலகுமாறு கேட்டுக் கொண்டுள்ளோம் என்றார்.

இச்சம்பவம் ஐ.பி.எஸ். அதிகாரிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
The West Bengal government is under fire after it transferred a senior IPS officer on Saturday who had arrested a serving IAS officer for corruption. IPS officer and former Siliguri police commissioner K Jayaraman arrested Malda District Magistrate Godala Kiran Kumar for allegedly embezzling government money sanctioned for civil projects to the tune of Rs 100 crore.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X