For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பசுவை வச்சி கோல்டு லோன் கொடுங்கள்.. மணப்புரம் விவசாயி அலப்பறை!.. திலீப்பின் தீவிர பாலோயர் போல!

Google Oneindia Tamil News

Recommended Video

    பசுவை வச்சி கோல்டு லோன் கொடுங்கள்.. மே.வங்கத்தில் நிகழ்ந்த சம்பவம்

    கொல்கத்தா: பாலில் தங்கம் உள்ளது என திலீப் கோஷ் கூறினாலும் கூறினார், அதற்காக இப்படியா என்ற அளவுக்கு மேற்கு வங்கத்தில் ஒரு விவசாயி செய்த செயல் உள்ளது.

    கடந்த சில ஆண்டுகளாக பாஜக நிர்வாகிகள் அமைச்சர்கள் என எதையாவது குண்டக்க மண்டக்கவாக பேசி வருகின்றனர். அதன்படி மேற்கு வங்கத்தின் புர்வானில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ் பேசினார்.

    அவர் கூறுகையில் மாடு என்பது எங்களுக்கு தாய் போன்றது. பசுவதையை நாங்கள் ஒரு சமூக விரோத செயலாகவே பார்க்கிறோம். தாய்ப்பாலுக்கு பின்னர் குழந்தைகள் பசும்பாலைத்தான் குடிக்கிறார்கள்.

    வயிறு பெரிசா இருக்கே.. 2 கிலோ தங்கத்தை விழுங்கிய 2 பெண்கள்.. அயன் பட பாணியில் ஒரு கடத்தல்!வயிறு பெரிசா இருக்கே.. 2 கிலோ தங்கத்தை விழுங்கிய 2 பெண்கள்.. அயன் பட பாணியில் ஒரு கடத்தல்!

    மஞ்சள் நிறம்

    மஞ்சள் நிறம்

    எங்களது தாயை கொலை செய்வதை எந்த வகையிலும் நாங்கள் சகித்துக் கொள்ளமாட்டோம். பசும் பாலில் தங்கம் இருக்கிறது. அதனால்தான் அது ஒருவித மஞ்சள் நிறத்துடன் இருக்கிறது. வெளிநாட்டு பசுக்களை வளர்க்காதீர்கள் என்றார்.

    பாலில் தங்கம்

    பாலில் தங்கம்

    இந்த நிலையில் மேற்கு வங்கத்தை சேர்ந்த ஒருவர் தங்குனி என்ற பகுதியில் இருக்கும் மணப்புரம் நிதி நிறுவனத்திற்கு சென்றார். அவர் இரு இந்திய பசுக்களுடன் வந்தார். அங்கு அதிகாரிகளிடம் பாலில் தங்கம் உள்ளது என திலீப் கோஷ் கூறியுள்ளார்.

    உண்மை

    உண்மை

    எனவே இந்த இரு மாடுகளை வைத்து கொண்டு தங்க கடன் கொடுங்கள் என கேட்டார். இதனால் ஆடி போன அதிகாரிகள் அவரிடம் உண்மையை புரிய வைத்து அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அந்த நபர் செய்தியாளர்களை சந்தித்தார்.

    குடும்பம்

    குடும்பம்

    அவர் கூறுகையில் தங்கக் கடன் வாங்குவதற்காக நான் இங்கு வந்துள்ளேன். அதனால் என்னுடன் இரு பசுமாடுகளை கொண்டு வந்துள்ளேன். பசும்பாலில் தங்கம் உள்ளது என கேள்விப்பட்டேன். எங்கள் குடும்பமே இந்த மாடுகளை நம்பிதான் உள்ளோம். என்னிடம் மொத்தம் 20 மாடுகள் உள்ளன. மாடுகளை வைத்துக் கொண்டு தங்க கடன் கொடுத்தால் எனது வியாபாரத்தை விருத்தியடையச் செய்வேன் என்றார்.

    15 லிட்டர் பால்

    15 லிட்டர் பால்

    இதுகுறித்து பஞ்சாயத்து தலைவர் மனோஜ் சிங் கூறுகையில், பாலில் தங்கம் இருக்கிறது என கூறிய திலீப்பிற்கு நோபல் பரிசுதான் தர வேண்டும். அவர் பாட்டுக்கு கூறிவிட்டு போய்விட்டார். ஆனால் மாடுகளுடன் எனது அலுவலகத்துக்கு தினமும் வரும் மக்கள் இதை வைத்து கடன் கொடுங்கள் என கேட்கிறார்கள். மேலும் இந்த மாடுகள் நாளொன்றுக்கு 15 முதல் 16 லிட்டர் பால் கறக்கும் என தெரிவிக்கின்றனர். ஒரு அரசியல் தலைவர் இப்படி பேசுவது தவறு என்றார்.

    English summary
    West bengal man reaches Manappuram Finance Limited with his cows to get gold loan by mortgaging them as per Dilip Ghosh's theory.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X