For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மேற்கு வங்கத்தில் வைரஸ் படுவேகம்.. கொரோனா காரணமாக ஆர்.எஸ்.பி வேட்பாளர் உயிரிழப்பு!

Google Oneindia Tamil News

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட ஆர்எஸ்பி வேட்பாளர் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தார்.

பிரதீப் குமார் நந்தி முர்ஷிதாபாத் மாவட்டம் ஜாங்கிபூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து போட்டியிட்டார் என்பது குறிப்பிட்டத்தக்கது.

West Bengal RSP candidate died due to corona virus

நாடு முழுவதும் கொரோனா தொற்று கோரத்தாண்டவமாடி வருகிறது. நாட்டின் தினசரி பாதிப்பு 2,00,000எ-ஐ கடந்து மிக மோசமான நிலையில் உள்ளது. சட்டசபை தேர்தல் நடைபெறும் மேற்கு வங்கத்திலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் அங்கு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி (ஆர்எஸ்பி) வேட்பாளர் பிரதீப் குமார் நந்தி கொரோனா வைரஸ் காரணமாக இறந்துள்ளார். பிரதீப் குமார் நந்திக்கு நான்கு நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரதீப் குமார் நந்தி பரிதாபமாக இறந்தார்.

மகாராஷ்டிராவில் 63,729 பேருக்கு கொரோனா.. டெல்லியில் புதிய உச்சம்.. உ.பி.யிலும் நிலைமை படு மோசம்!மகாராஷ்டிராவில் 63,729 பேருக்கு கொரோனா.. டெல்லியில் புதிய உச்சம்.. உ.பி.யிலும் நிலைமை படு மோசம்!

பிரதீப் குமார் நந்தி முர்ஷிதாபாத் மாவட்டம் ஜாங்கிபூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து போட்டியிட்டார் என்பது குறிப்பிட்டத்தக்கது. மேற்கு வங்கத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 6,910 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிப்பு மொத்த எண்ணிக்கை 6,43,795 ஐ எட்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 26 பேர் உயிரிழந்தனர்.

English summary
An RSP candidate contesting the Assembly elections in West Bengal has died due to corona virus
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X