For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொரோனா வைரஸ் எதிரொலி: பூடான் எல்லையை மூடியது மேற்கு வங்க அரசு

Google Oneindia Tamil News

கொல்கத்தா: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் பூடான் எல்லையை மேற்கு வங்க அரசு மூடிவிட்டதாக அந்த மாநில மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Recommended Video

    சீனாவில் கொரோனா பரவ அமெரிக்க ராணுவம் தான் காரணம்... பகீர் குற்றச்சாட்டு

    சீனாவில் ஒரு ரவுண்ட் வலம் வந்த கொரோனா வைரஸ் இந்தியா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த வைரஸால் உலகம் முழுவதும் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    West Bengal seals border with Bhutan over coronavirus scare

    இந்தியாவில் இந்த வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 83ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் பாதிப்பை தடுக்க நாடு முழுவதும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனர்.

    இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் பூடான் எல்லைக்கு மேற்கு வங்க அரசு சீல் வைத்தது. இதுகுறித்து மேற்கு வங்க மாநில அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில் மேற்கு வங்கத்தின் அலிபுர்துர் மாவட்டம் ஜெய்கானில் இந்தியப் பக்கத்தில் பூடான் எல்லை வாசலை மேற்கு வங்க காவல் துறை அமைத்துள்ளது.

    இன்று முதல் இந்தியாவிலிருந்து பூடானுக்கு பொருட்கள் ஏற்றுமதி, பயணிகள் செல்வதற்கு வெள்ளிக்கிழமை மாலை முதல் மாநில அரசு தடை விதித்துள்ளது. கடந்த மாதம் இமயமலை அருகே ஒரு அமெரிக்க சுற்றுலாப் பயணிக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டதை அடுத்து இமயமலையின் அனைத்து வழிகளிலும் தடை விதிக்கப்பட்டுவிட்டது என்றார் அவர்.

    English summary
    The West Bengal government has sealed the state's border with Bhutan in the wake of coronavirus.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X