For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'பங்களா' என பெயர் மாற்றம் பெறுகிறது மேற்கு வங்கம்.. சட்டசபையில் தீர்மானம்!

மேற்குவங்க மாநிலத்தை பங்களா என பெயர் மாற்றம் செய்வது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

கொல்கத்தா : மேற்குவங்க மாநிலத்தின் பெயர் பங்களா என பெயர் மாற்றம் செய்வதற்கான தீர்மானம் அந்த மாநில சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேற்குவங்க மாநிலத்திற்கு 'பங்களா' என பெயர் மாற்றம் செய்வது தொடர்பான தீர்மானம் அம்மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த தீர்மானம், மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேற்குவங்க மாநிலத்தின் பெயரை மாற்றம் செய்ய கடந்த ஆண்டு முடிவு செய்யப்பட்டது. மேற்குவங்கம் என்ற பெயரை ஆங்கிலத்தில் 'பெங்கால்', பெங்காலியில் 'பங்களா', இந்தியில் 'பங்கால்' என மூன்று பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டன. இதற்கான தீர்மானம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அந்த மாநில சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால் இந்த தீர்மானத்திற்கு எதிர்க்கட்சிகளும், மத்திய அரசும் எதிர்ப்பு தெரிவித்தன. மூன்று பெயர்கள் வைப்பதால் குழப்பங்கள் அதிகரிக்கும் என அரசின் இந்த முடிவுக்கு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் பெயர் மாற்றத்திற்கான திருத்தம் செயயப்பட்ட தீர்மானம் அந்த மாநில சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தின்படி அனைத்து மொழிகளிலும் 'பங்களா' என ஒரே பெயர் மாற்றம் செய்ய முன்மொழியப்பட்டது. இந்த தீர்மான சட்டவரைவுக்கு அனைவரும் ஒப்புதல் அளித்தனர். இதையடுத்து, அந்த சட்டவரைவு மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

English summary
Westbengal State name to be change as Bangal in all languages bill passed in assembly and sent for centre approval
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X