For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒடிஷாவிலும் இறந்து கரை ஒதுங்கிய திமிங்கலம்

Google Oneindia Tamil News

கஞ்சம், ஒடிஷா: தமிழகம், மும்பையைத் தொடர்ந்து ஒடிஷா மாநில கடற்கரையிலும் ஒரு பெரிய சைஸ் திமிங்கலம் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. இந்த திமிங்கலம் இறந்து ஐந்து நாட்களாகியிருக்கும் என்று தெரிகிறது.

இந்த திமிங்கலமானது 35 அடி நீளமும், 10 அடி சுற்றளவும் கொண்டதாகும். ஸ்பெர்ம் வேல் ரக திமிங்கலம் இது. கஞ்சம் தாலுகாவில் உள்ள கன்டியாகடா கிராமத்தில் கடற்கரையில் இது கரை ஒதுங்கியது.

Whale's body washed ashore at Ganjam coast in Odisha

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் வனச் சரக் திலீப் குமார் மார்த்தா தலைமையில் வனவர்கள் விரைந்து வந்து திமிங்கலத்தின் மீடலை மீட்கும் பணியலி் ஈடுபட்டனர்.

கப்பல் மோதி இந்த திமிங்கலம் இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த திமிங்கலத்தை ஒடிஷா அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்துவதா அல்லது கடற்கரையில் புதைத்து விடுவதா என்பது குறித்து ஆலோசனை நடந்து வருகிறதாம்.

தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சமீபத்தில் இப்படித்தான் ஏராளமான திமிங்கலங்கள் இறந்த நிலையிலும், உயிருடனும் கரை ஒதுங்கின. அதேபோல மும்பையிலும் ஜுஹு கடற்கரையில் சமீபத்தில் பெரிய சைஸ் திமிங்கலம் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது என்பது நினைவிருக்கலாம்.

English summary
The dead body of a 33-foot-long sperm whale got washed ashore at the Rushikulya rookery in Ganjam district of Odisha on Wednesday. It is the second sperm whale carcass to have reached Odisha coast. It was located near Kantiagada village. The whale is suspected to have died five days back. There has been a series of incidents where dead whales have been found at different beaches in the recent past.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X