For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆமிர்கான் சொன்னது நிதர்சனமான உண்மை.. அஸம்கான்

Google Oneindia Tamil News

லக்னோ: இந்தியாவில் சகிப்புத்தன்மை குறைந்து விட்டது என்று நடிகர் ஆமிர்கான் சொன்னது நிதர்சனமான உண்மைதான் என்று உ.பி. சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சரும், மூத்த சமாஜ்வாடிக் கட்சித் தலைவருமான அஸம் கான் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ஆமிர்கான் சொன்னது அத்தனையும் உண்மை. அவர் சொன்னது நிதர்சனமான உண்மைதான். அதற்காக அவரைக் குறி வைத்து யாரும் தாக்கக் கூடாது.

ஆமிர்கான், தனது மனைவி சொன்ன கருத்துக்களைத்தான் கூறினார். ஆமிர்கானின் மனைவி ஒரு இந்துப் பெண். அவர் தனது குழந்தைகளின் எதிர்காலம் இப்போதைய சூழ்நிலையில் எப்படி இருக்குமோ என்ற அச்சத்தில் அவ்வாறு கூறியுள்ளார். ஆமிர்கானின் மனைவிக்கே இந்த அச்சம் இருந்தால் சாமானிய மக்களின் உணர்வுகளை கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை என்று கூறியுள்ளார் அஸம்கான்.

அதேசமயம், ஆமிர்கான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாலிவுட்டைச் சேர்ந்த பலர் வலியுறுத்தியுள்ளனர்.

அனுபம் கெர்

நடிகர் அனுபம் கெர் இதுகுறித்து வெளியிட்டுள்ள டிவிட்டில், இத்தனை காலமாக இதே இந்தியாவில்தானே ஆமிர்கானின் மனைவியும், ஆமிர்கானும் வசித்து வந்தனர். அப்போதெல்லாம் ஏன் இப்படி அவர்களுக்குத் தோன்றவில்லை. இதுகுறித்து தனது மனைவியிடம் ஆமிர் கான் கேட்கவில்லை.

உருவாக்கிய நாடு இதுதானே

மேலும், தன்னை ஆமிர்கான் என்று இந்த மக்களுக்கு அறிய வைத்ததே இந்த நாடுதான் என்றும் தனது மனைவியிடம் ஆமிர் கூறவில்லையா என்று கேட்டுள்ளார் அனுபம் கெர்.

பெருமைக்குரிய இந்தியன்

பெருமைக்குரிய இந்தியன்

பழம்பெரும் நடிகரான நஸிருதீன் ஷாவிடம் இதுகுறித்து கேட்டபோது, நான் ஒரு பெருமைக்குரிய இந்தியன். திரைத் துறையினர் எதுகுறித்தும் கருத்து தெரிவிக்கலாம். அந்த உரிமை அவர்களுக்கு உள்ளது. அதேசமயம், கருத்துக்களை வெளிப்படுத்தும்போது பொறுப்பை உணர்ந்து பேச வேண்டும் என்றார் ஷா.

ஓம்பூரி

ஓம்பூரி

இன்னொரு பழம்பெரும் நடிகர் ஓம்பூரி இதுகுறி்த்துக் கூறுகையில், தனது கருத்துக்காக நாட்டு மக்களிடம் ஆமிர் கான் மன்னிப்பு கேட்க வேண்டும். உண்மையில், இதுவே சாதாரண நபராக இருந்திருந்தால் இன்னேரம் அவர் கைது செய்யப்பட்டிருப்பார்.

துவேஷத்தையே வளர்க்கும்

துவேஷத்தையே வளர்க்கும்

ஆமிர்கானின் பேச்சு மக்களுக்கிடையே துவேஷத்தையே ஏற்படுத்தும். இதுபோன்ற கருத்துக்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார் ஓம்பூரி.

English summary
Senior Samajwadi Party leader and UP Minister Azam Khan has came out in support of actor Aamir Khan arguing what he said was not about intolerance but a reality and exhorted people not to target the film star.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X