For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அட இது வேற இருக்குல.. ஏற்கனவே லிங்க் பண்ண ஆதார் விவரங்களை என்ன பண்றது?

ஆதார் விவரத்தை இனி தனியார் நிறுவனங்களுக்கு கொடுக்க கூடாது என்பதால் ஏற்கனவே கொடுத்த விவரங்களை எல்லாம் எப்படி திரும்ப பெறுவது என்ற கேள்வி எழுந்து இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஆதார் எங்கெல்லாம் தேவைப்படும் ? முழு தகவல் !- வீடியோ

    டெல்லி: ஆதார் விவரத்தை இனி தனியார் நிறுவனங்களுக்கு கொடுக்க கூடாது என்பதால் ஏற்கனவே கொடுத்த விவரங்களை எல்லாம் எப்படி திரும்ப பெறுவது என்ற கேள்வி எழுந்து இருக்கிறது.

    ஆதார் குறித்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம் தனியார் நிறுவனங்கள் ஆதார் விவரம் கேட்பது சட்ட விரோதம் என்றுள்ளது. தனியார் நிறுவனங்களுக்கு ஆதார் விவரத்தை மக்கள் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியுள்ளது.

    [பலத்த பாதுகாப்பு இருந்தும் கசிந்த ஆதார் தகவல்கள்... இதை மத்திய அரசு எப்படி சரி செய்ய போகிறது?]

    தீர்ப்பின் படி ஆதார் சட்டத்தின் 57வது பிரிவு நீக்கப்பட்டது. இதனால் இனி தனியார் நிறுவனங்கள் ஆதார் விவரத்தை கோர முடியாது.

    கட்டாயமாக கேட்டனர்

    கட்டாயமாக கேட்டனர்

    முதலில் ஆதார் அட்டையை மொபைல் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று உறுதியாக கூறி வந்தது மொபைல் நிறுவனங்கள். அதன்பின் புதிதாக சிம் வாங்க கண்டிப்பாக ஆதார் எண் வேண்டும் என்று ஆணை பிறப்பித்தது. இதனால், ஆதார் தகவல்கள் கட்டுக்கடங்காமல் தனியார் மொபைல் நிறுவனங்களுக்கு செல்ல ஆரம்பித்தது.

    90 சதவிகிதம் உள்ளது

    90 சதவிகிதம் உள்ளது

    இதன் காரணமாக தனியார் வங்கிகள், தனியார் நிறுவனங்கள், தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எளிதாக மக்கள் அனைவரின் ஆதார் தகவல்களை எடுத்துவிட்டது. தற்போது சுமார் 90 சதவிகித மக்களின் ஆதார் விவரங்கள் இந்த தனியார் நிறுவனங்களிடம் இருக்கிறது. போன் வைத்திருக்கும் 95க்கும் அதிகமான சதவிகித மக்களின் ஆதார் விவரங்கள் அவர்களிடம் உள்ளது.

    இனி செய்ய முடியாது

    இனி செய்ய முடியாது

    ஆனால் தற்போதைய நீதிமன்ற தீர்ப்பின்படி இனி மொபைல் நிறுவனங்கள், சிம் கார்ட் நிறுவனங்கள் என யாரும் ஆதார் விவரங்களை கேட்க முடியாது. கட்டாயம் ஆதார் எண்ணை அளிக்க வேண்டும் என்று கோர முடியாது. நாமும் புதிய சிம்கார்ட்டை ஆதார் இல்லாமலே வாங்கலாம்.

    6 மாதம் மட்டுமே

    6 மாதம் மட்டுமே

    இந்த நிலையில் இதற்கு முன் கொடுத்த விவரங்களை என்ன செய்வது என்ற குழப்பம் எல்லோருக்கும் எழுந்து இருக்கிறது. அந்த தகவல்களை திரும்ப பெற முடியாதா என்ற கேள்வி எழுந்து இருக்கிறது. ஆனால் உச்ச நீதிமன்ற உத்தரவு படி, ஆதார் விவரங்களை வைத்திருக்கும் தனியார் நிறுவனங்கள் இன்னும் 6 மாதத்திற்கு மட்டுமே அந்த விவரங்களை வைத்திருக்க முடியும், அதன்பின் அதை தங்கள் தரவுகளில் இருந்து நீக்கிவிட வேண்டும் என்று ஆணையிட்டு இருக்கிறது. இதனால் தனியாரிடம் சென்ற ஆதார் விவரங்கள் எல்லாம் அழிக்கப்பட்டுவிட வாய்ப்புள்ளது.

    {document1}

    English summary
    The linked Aadhaar details of you with private sectors will be automatically deleted in next 6 month.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X