For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சொன்னதைச் செய்யும் தலைவர் நரேந்திர மோடி: ஸ்மிரிதி இராணி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

smriti irani
அகமதாபாத்: சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்று இல்லாமல் சொன்னதை செய்கிறார் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி. இதனால்தான் அவரை பெண்களுக்குப் பிடித்திருக்கிறது என்று கூறியுள்ளார் முன்னாள் நடிகையும், பாஜக தலைவர்களில் ஒருவருமான ஸ்மிரிதி இராணி.

ஸ்மிரிதி இராணி, குஜராத்தைச் சேர்ந்த பாஜக எம்.பியும் ஆவார். இவர் சாஸ் பி கபி பஹு தி என்ற டிவி சீரியல் மூலம் பிரபலமானவர் .

அகமதாபாத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கூறியதாவது:

ராஜீவ் காந்தி காலம் எல்லாம் போய் விட்டது. முதல்வர் நரேந்திர மோடி தான் சொன்னதைச் செய்கிறார். அவர் செய்வதை இங்குள்ள பெண்கள் பாராட்டுகிறார்கள்.

வெறுமனே அவர் கவர்ச்சிக்காக எதையும் செய்வதில்லை. மாறாக உண்மையிலேயே அனைவருக்கும் பயன்படியான திட்டங்களைத்தான் நிறைவேற்றுகிறார். இதுதான் பெண்களைக் கவர்ந்துள்ளது.

பெண்கள் யாரும் நம்ப மாட்டார்கள். அப்படி நம்பி விட்டால் கடைசி வரை அவர்களுக்குத் துரோகம் செய்ய மாட்டார்கள். விசுவாசமாக இருப்பார்கள். பெண்கள் சுயமாக எதையும் செய்வதில்லை, வீட்டில் உள்ள ஆண்களின் ஆதிக்கத்தின் கீழ்தான் அவர்கள் செயல்படுகிறார்கள் என்று தவறான ஒரு கருத்து நிலவி வருகிறது. அது தவறு.

2 ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 25 பெண்களை நான் குஜராத் அழைத்து வந்தேன். மாநிலம் முழுவதும் அவர்கள் சுற்றிப் பார்த்தனர். பின்னர் நரேந்திர மோடியை அவர்கள் சந்தித்தனர். அப்போது எது சரியாக இருக்கிறது, எது இல்லை என்று அவர்களிடம் கேட்டார் மோடி. அப்போது பெண்கள் கூறிய கருத்துக்களையும், யோசனைகளையும் அவர் உன்னிப்புடன் கேட்டுக் கொண்டார்.

பெண்களின் கருத்துக்கு மதிப்பு கொடுத்து உண்மையான அக்கறையுடன் அவர் கேட்டார். மேலும் அவர்கள் சொன்ன பல யோசனைகளை உடனடியாக அமல்படுத்தவும் அவர் உத்தரவிட்டார் என்றார் ஸ்மிரிதி இராணி.

English summary
Days after Narendra Modi's elevation as BJP PM candidate for Lok Sabha elections, Smriti Irani explained reasons why women are smitten by the Gujarat Chief Minister. Former actress Irani, who is known as Indian bahu (daughter-in-law) following her TV serial 'Saans Bhi Kabhi Bahu Thi', is a BJP MP from Gujarat to the Rajya Sabha.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X