For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Cyclone Amphan: கொல்கத்தாவையே புரட்டி போட்ட ஆம்பன் புயல்.. ரூ.1 லட்சம் கோடிக்கு பெருத்த நஷ்டம்

Google Oneindia Tamil News

கொல்கத்தா: உயிர் சேதம், பொருட் சேதம் என மேற்கு வங்கத்தையே புரட்டி போட்ட ஆம்பன் புயலால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதித்தது. இங்கு ரூ 1. லட்சம் கோடிக்கு சேதமடைந்துள்ளதாக மாநில அரசு கூறுகிறது.

Recommended Video

    Amphan Storm| கரையை கடந்தது ஆம்பன் புயல்... பெரும் சேதம்

    அந்தமான் அருகே வங்கக் கடலில் உருவான புயல் சூப்பர் புயலாக மாறியது. இந்த ஆம்பன் புயல் நேற்று மேற்கு வங்கத்தின்
    டிக்காவுக்கும் வங்கதேசத்தின் ஹதியா தீவுக்கும் இடையே கரையை கடந்தது.

    What happened in West Bengal because of Amphan

    அப்போது காற்று மணிக்கு 133 கி.மீ. வேகத்தில் பலமாக வீசியது. இதனால் அங்கு மரங்களும் மின்கம்பங்களும் வேரோடு சாய்ந்தன. அதிக வேக காற்றால் அங்கு உள்ள டெல்டா பகுதிகள் மற்றும் கொல்கத்தாவின் நகர்ப்புற பகுதிகளிலும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

    மாநிலத்தில் ஒரு லட்சம் கோடி வரை இழப்பீட்டை ஏற்படுத்திவிட்டு சென்றது. சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளது. ரயில் தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியது. இந்த பாதிப்புகளை சரி செய்ய இன்னும் சிறிது நாட்கள் ஆகும் என தெரிவிக்கப்படுகிறது.

    கனமழை.. சுழன்று அடித்த காற்று.. மேற்கு வங்கம் - வங்கதேசம் இடையே கரையை கடந்த ஆம்பன் புயல்கனமழை.. சுழன்று அடித்த காற்று.. மேற்கு வங்கம் - வங்கதேசம் இடையே கரையை கடந்த ஆம்பன் புயல்

    கொல்கத்தா விமான நிலையங்களிலும் தண்ணீர் தேங்கியது. இந்த புயலால் 10- முதல் 12 பேர் வரை இறந்துவிட்டனர். கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் ஸ்தம்பித்துள்ள நிலையில் இந்த புயல் மேற்கு வங்கத்தையே புரட்டி போட்டுவிட்டது.

    English summary
    Cyclone Amphan causes heavy damages in West Benga worth 1 Lakh Crore.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X