For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெங்களூர் சிறையில் இளவரசிக்கு செம "வேலை" கொடுத்த சசிகலா

நான்கு வருட சாதாரண சிறை தண்டனை என்பதால் சிறையில் வேலை பார்ப்பது கட்டாயம் கிடையாது. ஆனால், இளவரசிக்கு கடிதம் வாசிப்பது ஒரு புது வேலையாக போய்விட்டது என்கிறார்கள் சிறைத் துறை வட்டாரங்களில்.

By Veera Kumar
Google Oneindia Tamil News

பெங்களூர்: சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள இளவரசி தனது பொழுது போக்கிற்காக என்ன செய்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. ஜெயலலிதா மரணடைந்து விட்டதால் அவரை தவிர்த்த மற்ற மூவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா பகுதியிலுள்ள மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதில் இளவரசியும், சசிகலாவும் ஒரே சிறையிலும், சுதாகரன் ஆண்களுக்கான சிறைப் பிரிவிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இளவரசிக்கு பொழுது போக்க கிடைத்துள்ள ஆயுதம்தான் கடிதங்கள்.

கடிதங்கள்

கடிதங்கள்

பெங்களூர் சிறைச்சாலைக்கு சசிகலா பெயரிட்டு நிறைய கடிதங்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன. இவற்றை முன்பு சசிகலாவே படித்தார். ஆனால் அதில் 10க்கு ஆறு கடிதங்கள் சசிகலாவை வசை பாடி வரும் கடிதங்கள். எனவே இப்போதெல்லாம் சசிகலா அக்கடிதங்களை படிப்பதை நிறுத்திவிட்டாராம்.

வாசிக்கும் வேலை

வாசிக்கும் வேலை

இப்போது அந்த வேலையை இளவரசி பார்க்கிறார். தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் சசிகலாவுக்கு பொதுமக்கள் அனுப்பும் கடிதங்களை இளவரசி படித்து பார்த்து, திட்டல், வசை இல்லாத கடிதங்களை மட்டுமே சசிகலா கைகளுக்கு கொண்டு சேர்க்கிறார். இப்போது இளவரசிக்கு இதுதான் டைம் பாஸ்.

சசிகலா வேதனை

சசிகலா வேதனை

பல்வேறு கடிதங்கள், ஜெயலலிதாவை சசிகலா கொலை செய்துவிட்டதாகவே குற்றம்சாட்டி வருவதுதான் சசிகலாவின் அதிர்ச்சிக்கு காரணம். இத்தனை ஆண்டுகள் ஜெயலலிதாவுடன் இருந்து பராமரித்துக் கொண்டதற்கு கிடைத்த பரிசா இது என்று அவர் இளவரசியிடம் புழங்கினாராம். இதனால்தான் இளவரசியே கடிதங்களை படிக்க தொடங்கியுள்ளார்.

புது வேலை

புது வேலை

நான்கு வருட சாதாரண சிறை தண்டனை என்பதால் சிறையில் வேலை பார்ப்பது கட்டாயம் கிடையாது. ஆனால், இளவரசிக்கு கடிதம் வாசிப்பது ஒரு புது வேலையாக போய்விட்டது என்கிறார்கள் சிறைத் துறை வட்டாரங்களில்.

English summary
Ilavarasi who along with Sasikala Natarajan was convicted in the disproportionate assets has a new job to do at Central Prison, Parappana Agrahara, Bangalore 560100. Serving a simple imprisonment of four years, Ilavarasi has her hands tied as she screens the 100s of letters that Sasikala receives in jail.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X