For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

3 நாடுகளில் இயங்கும் குழு.. கொலை முதல் வன்புணர்வு வரை.. மோமோ சேலஞ்சும் அதிர வைக்கும் பின்னணியும்!

இந்தியா தொடங்கி பல நாடுகளை உலுக்கி இருக்கும் மோமோ சேலஞ்சு பின்புலத்தில் பெரிய குழுவே இயங்கி வருகிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியா தொடங்கி பல நாடுகளை உலுக்கி இருக்கும் மோமோ சேலஞ்சு பின்புலத்தில் பெரிய குழுவே இயங்கி வருகிறது.

பிட்னஸ் சேலஞ்ச் மக்களின் வரிப்பணத்தில் கை வைத்தது, கிகி சேலஞ்ச் போக்குவரத்து பாதுகாப்பில் பிரச்சனையை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான் தற்போது மோமோ சேலன்ச் மொத்தமாக மக்களின் உயிரில் கை வைத்துள்ளது.

சிறுவர்கள், இளைஞர்களின் உயிரை குடிக்கும் இந்த சேலஞ்சிற்கு பின் பெரிய வரலாறு இருக்கிறது. அதேபோல் இந்த குழுவிற்கு பின்பு மோசமான பின்னணியும் இருக்கிறது.

உருவம்

உருவம்

இந்த மோமோ சேலன்ச் செய்யும் வாட்ஸ் ஆப் எண்ணில் பொதுவாக ஒரு பேய் போன்ற பொம்மையின் புகைப்படம் இருக்கும். இது ஜப்பானில் வடிவமைக்கப்பட்ட ''பேர்ட் மதர்'' என்ற பிரபல பொம்மையின் காப்பியாகும். மீதோரி ஹயாஷி என்பவர் இந்த பொம்மையை வடிவமைத்தார். ஜப்பானில் பிரபலமான இந்த பொம்மை அங்கு பொது இடங்களில் காட்சி பொருளாகவும் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் மீதோரி ஹயாஷிக்கும் இந்த சேலஞ்சிற்கும் எந்த தொடர்பும் இல்லை.

உருவானது எப்படி

உருவானது எப்படி

இது எப்போது எங்கே உருவானது என்று யாராலும் சொல்ல முடியவில்லை. ஆனால் இது உருவானது வாட்ஸப் ஆப்பில் இல்லை பேஸ்புக்கில் என்பது தான் முக்கியமான விஷயம். 2 மாதம் முன் பேஸ்புக்கில் உள்ள குழு ஒன்றில் இது முதலில் உருவாக்கப்பட்டு அவர்களுக்குள் மட்டும் விளையாடப்பட்டு பின் கொஞ்சம் கொஞ்சமாக பரவி இப்போது வாட்ஸ் ஆப் வைரலாகி உள்ளது.

இரண்டு விதமான தொடர்பு

இரண்டு விதமான தொடர்பு

இந்த குழு மக்களுடன் இரண்டு விதமாக தொடர்பை ஏற்படுத்தும். ஏற்கனவே மோமோவுடன் பேசிக்கொண்டு இருக்கும் நபர், அந்த எண்ணை பிறருக்கு கொடுத்து தொடர்பை ஏற்படுத்துவார்கள். சிலரிடம் மோமோ அதுவாகவே தொடர்பு கொள்ளும். இரண்டாவது வகை தொடர்பு இப்போது அதிகம் ஆகியுள்ளது.

தொந்தரவு

தொந்தரவு

ஒருமுறை தொடர்பு கொண்டவுடன், இது அந்த நபருக்கு ஒரு போட்டி வைக்கும். இதை செய்ய வேண்டும், அதை செய்ய வேண்டும் என்று, செல்பி எடுப்பது போல மிக மிக எளிதான காரியமாக இருக்கும். ஆனால் இதற்கு பின் இருக்கும் குழு கொஞ்சம் கொஞ்சமாக வித்தியாசமான போட்டிகளை வைக்கும். அதை செய்யவில்லை என்றால் உங்கள் அந்தரங்கத்தை வெளியிடுவோம், இல்லை கொன்றுவிடுவோம் என்று மிரட்டும்.

டாஸ்க்

டாஸ்க்

சாதாரணமாக ஆரம்பிக்கும் இந்த டாஸ்க் கொஞ்சம் கொஞ்சமாக கையை கிழிப்பது, உடலை துன்புறுத்துவது, சிறிதாக திருடுவது என்று நீளும். அதன்பின் பாலியல் வன்புணர்வு, கொலை, கொள்ளை என்று வரிசையாக டாஸ்க் நீண்டு கொண்டே இருக்கும். அதன்பின் சரியாக தற்கொலை செய்ய கொள்ள சொல்வதில் முடியும். இல்லையென்றால் அதுவரை செய்ததை, மற்ற ரகசியங்களை வெளியிட்டுவிடுவோம் என்று மிரட்டும்.

குறி வைக்கப்படுவது யார்

குறி வைக்கப்படுவது யார்

இதில் பொதுவாக, சிறுவயதில் போன் பயன்படுத்தும் நபர்கள் குறிவைக்கப்படுவார்கள். 18 வயதிற்கு குறைவாக உள்ளவர்கள் குறிவைக்கப்படுகிறார்கள். அதேபோல் இளைஞர்களும் இதில் குறிவைக்கப்படுகிறார்கள். தனியாக இருக்கும் இளம் வயது பெண்களும் இதை குறிவைக்கப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்புறத்தில் இருப்பது

பின்புறத்தில் இருப்பது

இதற்கு பின்புலத்தில் மூன்று குழுக்கள் இருக்கிறது. ஜப்பான், மெக்சிகோ, கொலம்பியா நாட்டை சேர்ந்த மூன்று குழுக்கள் இதில் பின்னாடி உள்ளது. இவர்களுக்கு தெரிந்துசைக்காலஜி வித்தைகளை ஹைடெக் ஹேக்கிங்கை வைத்து இவர்கள் இந்த வேலையை செய்கிறார்கள். அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளில் இந்த போட்டி பிரபலமாக இருக்கிறது.

ஒரே குழு

ஒரே குழு

ஹாலிவுட்டில் ஹிட் அடித்த பைட் கிளப் படத்தில் இதேபோல் சண்டை போடுவதற்கு என்று குழு உருவாகி, பின் அதே குழு பெரிய அளவில் வளரும். அதேபோல்தான் இவர்களும் உலகை எதிர்த்து இப்படி செய்யலாம் என்று கூறப்படுகிறது. மேலும் கடந்த வருடம் வைரலான ப்ளூ வேல் கேம் பின்புலத்தில் இதே குழு இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் யார்

இந்தியாவில் யார்

இந்தியாவில் இவர்கள் நேரடியாக செயல்படவில்லை. இதை சிலர் விளையாட்டாக நண்பர்களுக்கு செய்கிறார்கள். சிலர், திரிலுக்காக தெரியாத ஆட்களிடம் இப்படி விளையாடுகிறார்கள். இதை இந்தியாவில் பெரிய அளவில் காமெடி பொருளாக மாற்றி வைத்துள்ளனர் என்பது மட்டும் மகிழ்ச்சி அளிக்க கூடிய விஷயம்.

English summary
Momo Challenge has huge history which extends to three countries.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X