For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மண்டைக்கேறிய முதல்வர் பதவி ஆசை.. பழம் நழுவி பாலில் விழ சச்சின் பைலட் செய்யும் சாணக்கியத்தனம்?

Google Oneindia Tamil News

ஜெய்ப்பூர்: மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து பாஜக ஆட்சி அமைய காரணமாக இருந்த ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவாளர்களுக்கு முக்கிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளதை போல் தனக்கு முதல்வர் பதவியும் தனது ஆதரவாளர்களுக்கு முக்கிய துறைகளும் ஒதுக்கப்படும் என்ற எண்ணத்துடன் இது போன்ற சாணக்கியத்தனத்தை பைலட் நடத்துவதாக கூறப்படுகிறது.

மத்திய பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் ஜோதித்ராதிய சிந்தியா தான் ஒரங்கட்டப்படுவதாக கூறி காங்கிரஸை விட்டு வெளியேறினார்.

அப்போது 20 எம்எல்ஏக்களையும் கூடவே அழைத்து வந்தார். அங்கு காங்கிரஸ் அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்பது நிரூபணம் ஆனது. பின்னர் ஜே பி நட்டாவை சந்தித்து பாஜகவில் இணைந்தார். இதையடுத்து ஆட்சி கவிழ்ந்து சிந்தியா தலைமையிலான எம்எல்ஏக்கள் குழுவுடன் பாஜக ஆட்சி மலர்ந்தது.

102 எம்எல்ஏக்களின் ஆதரவா?.. கெலாட் சொல்வது சுத்த பொய்.. மல்லுக்கட்டும் சச்சின் பைலட் 102 எம்எல்ஏக்களின் ஆதரவா?.. கெலாட் சொல்வது சுத்த பொய்.. மல்லுக்கட்டும் சச்சின் பைலட்

சிவராஜ் சிங் சவுகான்

சிவராஜ் சிங் சவுகான்

மத்திய பிரதேசத்தில் முதல்வராக சிவராஜ் சிங் சவுகான் பதவியேற்றுக் கொண்டார். இந்த நிலையில் சிந்தியாவின் தீவிர ஆதரவாளர்களுக்கு முக்கிய துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. கோவிந்த் சிங் ராஜ்புத்துக்கு வருவாய் மற்றும் போக்குவரத்து துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அது போல் டாக்டர் பிரபுராம் சவுத்ரிக்கு சுகாதாரத் துறையும், பிரத்யூம்ன சிங் தோமர், இமார்தி தேவி ஆகியோருக்கு முறையே எரிசக்தி மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முக்கிய துறைகள்

முக்கிய துறைகள்

பாஜகவின் யசோதரா ராஜே சிந்தியாவுக்கு விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை, நரோத்தம் மிஷ்ராவுக்கு மாநில உள்துறை, பாராளுமன்ற விவகாரம், சட்டம் மற்றும் நீதி ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் முதல்வர் கனவு நொறுங்கிய நிலையில் தனது ஆதரவாளர்களுக்கு முக்கிய பதவிகள் கிடைக்கும் என எதிர்பார்த்தார்.

பைலட்

பைலட்

ஆனால் அவ்வாறு கிடைக்கப் பெறவில்லை. இதனால் இது போன்றதொரு கலகத்தை ஏற்படுத்தினால் நிச்சயம் தனக்கு முதல்வர் பதவியும் தனது ஆதரவாளர்களுக்கு அமைச்சரவையில் பதவிகளும் வழங்கப்படும் என்பது சச்சின் பைலட்டின் கணக்கு. சச்சின் நிச்சயம் பாஜகவில் இணைய மாட்டார், பாஜக தலைவரை சந்திக்க மாட்டார் என பைலட்டின் உதவியாளர் கூறியதிலிருந்து யூகிக்கப்படுகிறது.

கர்நாடகா

கர்நாடகா

கர்நாடகா, மத்திய பிரதேசத்தை தொடர்ந்து ராஜஸ்தானையும் இழக்க காங்கிரஸ் விரும்பவில்லை. இதனால் எப்படியாவது சச்சின் பைலட்டை பேசி சமாதானப்படுத்தி ஆட்சியை தக்க வைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் சச்சினுக்கு முதல்வர் பதவி வழங்கவும் தயாராக இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

English summary
What is the reason behind Rajasthan political Turmoil? Shivraj Chouhan gives important portfolios to Scindia Loyalists.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X