For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நிலம் நனைய தண்ணீர் கேட்டோம், நதி நனைய மட்டுமே கிடைத்துள்ளது.. வைரமுத்து டிவிட்

நிலம் நனைய தண்ணீர் கேட்டோம், நதி நனைய மட்டுமே கிடைத்துள்ளது என்று வைரமுத்து டிவிட் செய்து இருக்கிறார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    காவிரி வழக்கில் தமிழகத்துக்கான நீரை குறைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு- வீடியோ

    பெங்களூர்: நிலம் நனைய தண்ணீர் கேட்டோம், நதி நனைய மட்டுமே கிடைத்துள்ளது என்று வைரமுத்து டிவிட் செய்து இருக்கிறார்.

    காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. அதன்படி காவிரி ஆற்றை உரிமை கொண்டாட எந்த மாநிலத்திற்கும் உரிமையில்லை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

    What we are going to do in Cauvery verdict asks Poet Vairamuthu

    தமிழகத்திற்கு கர்நாடகா 177.25 டி.எம்.சி நீர் தர உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நடுவர் மன்றம் 192 டிஎம்சி வழங்க உத்தரவிட்ட நிலையில் அதனை சுப்ரீம் கோர்ட் குறைத்துள்ளது.

    தற்போதைய தீர்ப்பு காரணமாக தமிழகத்திற்கு 14.75 டிஎம்சி நீர் குறைவாக கிடைக்கும். கர்நாடகத்துக்கு 280.75 டி.எம்.சி. நீர் வழங்க உத்தரவு.

    இதுகுறித்து தற்போது கவிஞர் வைரமுத்து டிவிட் செய்துள்ளார். அதில் ''தீர்ப்பா? தீர்வா? நிலம் நனையத் தண்ணீர் கேட்டோம்; நதி நனைய மட்டுமே கிடைத்திருக்கிறது. தீர்ப்பை ஏற்றுக்கொள்வது ஒருபுறம்;எதிர்கொள்வது மறுபுறம். என்ன செய்யப் போகிறோம்? #தீர்ப்பா_தீர்வா?'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

    English summary
    What we are going to do in Cauvery verdict asks Poet Vairamuthu . He says that Cauvery verdict in a injustice to Tamil people.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X