For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இவ்வளவு விஷயம் நடக்குமா? ஒருவேளை ஜம்மு காஷ்மீரை மூன்றாக பிரித்தால் என்ன ஆகும்.. முழு பின்னணி!

ஜம்மு காஷ்மீரை மூன்றாக பிரிப்பதன் மூலம் அரசியல் ரீதியில் நிறைய சாதகமான சூழ்நிலை உருவாகும் என்று மத்திய அரசு நினைக்கிறது.

Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரை மூன்றாக பிரிப்பதன் மூலம் அரசியல் ரீதியில் நிறைய சாதகமான சூழ்நிலை உருவாகும் என்று மத்திய அரசு நினைக்கிறது.

மத்திய பாஜக அரசு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை, ஜம்மு, காஷ்மீர், லடாக் என்று மூன்றாக பிரிக்க இருப்பதாக தகவல்கள் வருகிறது. இதற்காகத்தான் அங்கு ராணுவத்தை குவித்து வருவதாகவும் கூறுகிறார்கள்.

அதன்படி காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரத்தை அளித்துவிட்டு, ஜம்மு மற்றும் லடாக்கை தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது. ஆனால் மத்திய அரசு சார்பாக இது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

காஷ்மீர்.. ஜம்மு.. லடாக்.. மூன்றாக பிரிக்க திட்டமிடுகிறதா மத்திய அரசு.. ஆகஸ்ட் 15ல் என்ன நடக்கும்?காஷ்மீர்.. ஜம்மு.. லடாக்.. மூன்றாக பிரிக்க திட்டமிடுகிறதா மத்திய அரசு.. ஆகஸ்ட் 15ல் என்ன நடக்கும்?

எப்படி முடியும்

எப்படி முடியும்

காஷ்மீரை மூன்றாக பிரிப்பதன் மூலம் மத்திய அரசுக்கு சில சாதகமான சூழ்நிலைகள் உருவாகும் என்றும் அரசியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள். அதில் முதலாவது காஷ்மீர் பிரிவினைவாதிகள் இதனால் மொத்தமாக முடக்கப்பட வாய்ப்புள்ளது. இப்போது காஷ்மீர் பிரிவினைவாத இயக்கங்கள் எல்லாம் ஒன்றாக இருக்கிறது.

என்ன நடக்கும்

என்ன நடக்கும்

ஆனால் காஷ்மீர் மூன்றாக பிரிக்கப்பட்டால், பிரிவினைவாதிகளுக்கு இடையிலும் சிக்கல் ஏற்படும். சிலர் ஜம்முவிற்காக போராடுவார்கள், சிலர் காஷ்மீருக்காக போராடுவார்கள், இன்னும் சிலர் லடாக்கிற்கு உரிமை கோருவர்கள். இதனால் மத்திய அரசின் கை ஓங்கும்.

என்ன நிர்வாகம்

என்ன நிர்வாகம்

அதேபோல் நிர்வாக ரீதியாகவும் மூன்று பகுதிகளை எளிதாக நிர்வகிக்க முடியும் என்று பாஜக கருதுகிறது. ஜம்முவில் உள்ள படைகளை மொத்தமாக காஷ்மீருக்கு மட்டும் அனுப்பி. அதை எளிதாக கட்டுபடுத்த முடியும். ஜம்மு சாதாரண மாநிலம் போல அமைதியாக இருக்கும், என்று மத்திய பாஜக அரசு நினைக்கிறது.

காஷ்மீர் என்ன

காஷ்மீர் என்ன

அது போக ஜம்மு காஷ்மீர் மூன்றாக பிரிக்கப்பட்டால், லடாக், ஜம்மு இரண்டு மாநிலங்களிலும் நடக்கும் தேர்தல்களில் பாஜக வெல்லவே அதிக வாய்ப்புள்ளது. காஷ்மீரில் மட்டும் பாஜக தோல்வி அடையலாம், அல்லது கூட்டணி ஆட்சி அமைக்கலாம். இதனால் காஷ்மீரின் அனைத்து வலுவான மாநில கட்சிகளும் மொத்தமாக வலிமை இழக்கும் என்றும் கூறுகிறார்கள்.

மாநில கட்சிகள்

மாநில கட்சிகள்

மாநில கட்சிகள் இங்கு வலிமை இழக்கும் காரணத்தால் எதிர்காலத்தில் அங்கு பாஜக தனிப்பெரும் கட்சியாக மாற வாய்ப்புள்ளது. அதேபோல் லடாக்கில் சீனாவின் ஆக்கிரமிப்பை கட்டுப்படுத்தவும் இது உதவியாக இருக்கும் என்று மத்திய பாஜக அரசுநினைக்கிறது. அதே சமயம் ஜம்மு காஷ்மீரில் இதனால் மிகப்பெரிய புரட்சி வெடிக்க கூட வாய்ப்புள்ளது.

English summary
What will happen if Jammu Kashmir partitioned into three regions?- Here are the details.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X