For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"டாக்குமெண்ட்” அனுப்ப இனி மெயிலைத் தேடி ஓடவேண்டாம்...வாட்ஸப் போதுமே - புதிய வசதி அறிமுகம்!

Google Oneindia Tamil News

டெல்லி: உலகளவில் பிரபலமான மொபைல் அப்ளிகேஷனான வாட்ஸப் தற்போது அதன் மற்றொரு மைல் கல்லாக ஆவணங்களை நேரடியாக அனுப்பும் முறையினை அறிமுகப்படுத்தியுள்ளது.

வாட்ஸப் மெசெஞ்சர் அப்ளிகேஷனை ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கிய பிறகு பல புதுமையான வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

அந்த நிறுவனம் இப்பொழுது வாட்ஸ்ப் மூலமே ஆவணங்களை அனுப்பும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இரண்டு பதிப்புகளில் அறிமுகம்:

இரண்டு பதிப்புகளில் அறிமுகம்:

இந்த வசதியானது ஆன்ட்ராய்டு செல்போன் V2.12.453 பதிப்பிலும், ஆப்பிள் செல்போன் V2.12.4 பதிப்பிலும் அறிமுகப்படுத்தியுள்ளது.

பிடிஎஃப் அனுப்புவது ஈஸி:

பிடிஎஃப் அனுப்புவது ஈஸி:

ஏற்கனவே, வீடியோ, ஆடியோ, படம், தொடர்புகள் ஆகியவற்றை அனுப்ப முடியும். தற்போது, கூடுதலாக பி.டி.எஃப் ஆவணங்களை அனுப்ப வசதி செய்யப்பட்டுள்ளது. தற்போது வாட்ஸ் அப்பில் 6 ஐகான்கள் உள்ளன. புதிய வெர்ஷனில் வீடியோ,புகைப்படங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு ஒரே ஐகானாக மாற்றப்பட்டுள்ளது.

அப்டேட் பண்ணுங்கப்பா:

அப்டேட் பண்ணுங்கப்பா:

மேலும் ஆவணம் யாருக்கு அனுப்பப்படுகிறதோ அந்த நபரும் அவருடைய வாட்ஸ் அப்பினை அப்டேட் செய்திருந்தால் மட்டுமே அதனை பெற முடியும்.

100 புதிய ஸ்மைலிகள் அறிமுகம்:

100 புதிய ஸ்மைலிகள் அறிமுகம்:

அதேபோல், வாட்ஸப்பில் நூறு புதிய எமோஜிகள் எனப்படும் ஸ்மைலிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த மேம்படுத்தப்பட்ட வாட்ஸ் அப் அப்ளிகேஷனை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
WhatsApp, the Facebook-owned mobile messaging service that recently hit 1 billion users worldwide, is today rolling out a much-anticipated feature to its apps on iOS and Android devices.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X