For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டிஜிட்டல் தீபாவளி

By Madhivanan
Google Oneindia Tamil News

பெங்களூர்:: தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. தீப ஒளிதிருநாளான தீபாவாளியை குடும்பத்துடனும் நண்பர்களுடனும் ஷாப்பிங், பரிசுப் பொருட்கள், இனிப்பு பொருட்கள் வழங்கி நாடே கொண்டாடியது.

தீபாவளி திருநாளின் தத்துவமே அன்பை பரிமாறிக் கொண்டு உறவுகளை வலுப்படுத்திக் கொள்வதுதான்... இந்த ஆண்டு சிட்டிபேங் தீபாவாளி திருநாளை சற்று வித்தியாசமாக 'டிஜிட்டல் தீபாவளி'யாக கொண்டாடியது. அதாவது தீபாவளி தொடர்பான வீடியோக்களை வெளியிட்டிருந்தது சிட்டி பேங்க்.

citibank

கடந்த நவம்பர் 1-ந் தேதி தொடங்கிய சிட்டி பேங்கின் டிஜிட்டல் தீபாவளி கொண்டாட்டம் தீபாவளி நாள் வரை நடைபெற்றது. பிளிப்கார்ட், அமேசான் போன்ற ஆன்லைன் ஷாப்பிங், சுற்றுலா தொடர்பான மேக் மை ட்ரிப், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களுக்கான விஜய் சேல்ஸ், ஆப்பிள், மளிகை சாமான்களுக்கான ரிலையன்ஸ் ப்ரெஸ், சூப்பர் மார்ட் ஆகியவற்றுடன் இணைந்து ஏராளமான ஆஃபர்களை தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் சிட்டிபேங் வழங்கிவருகிறது.

இந்த ஆண்டு 'டிஜிட்டல் தீபாவளி' கொண்டாட்டத்தின் முதல் நாள் டெல்லியின் டி.எல்.எப். சாகேத் மாலில் ஏ.ஆர். டெக்னாலஜி மூலம் பாதுகாப்பான, மாசற்ற தீபாவாளியை எப்படி கொண்டாடுவது என்பது தொடர்பான வீடியோ வெளியிடப்பட்டது.

அத்துடன் #WhatsNewThisDiwali என்ற ஹேஸ்டேக் மூலம் ட்விட்டரில் ஏராளமானோர் தங்களது தீபாவளி அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூகவலை தளங்களில் படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்து கொண்டனர்.

அதேபோல் புத்தாண்டு தொடர்பான உறுதி மொழிகளையும் கூட பகிர்ந்து கொண்டனர். இந்த தீபாவளியின் போது ஆரோக்கியமான வாழ்க்கை முறை எவ்வளவு அவசியமானது என்பதையும் பகிர்ந்து கொண்டனர்.

#WhatsNewThisDiwali ஹேஸ்டேக் ட்விட்டரில் அதிக அளவில் ட்ரெண்டிங்கும் ஆனது. தாங்கள் நேசிப்பவருக்கு என்ன மாதிரியான பரிசுகளை வழங்கப் போகிறோம் என பலரும் தெரிவித்திருந்தனர்.

நவம்பர் 7-ந் தேதி சிட்டிபேங் மற்றொரு வீடியோ ஒன்றை வெளியிட்டது. அதில் தங்களது இளம்பிராயத்தில் தீபாவளியை எப்படியெல்லாம் கொண்டாடினர் என பலரும் நினைவு கூர்ந்தனர். அப்போது #Citi என்ற ஹேஸ்டேக் டிரெண்டிங் ஆனது.

இது தொடர்பான வீடியோ யூ டியூப், வுகிளிப் உள்ளிட்ட தளங்களில் வைரலாக பரவியது. மொத்தம் 50 லட்சம் பேர் இதனை பார்வையிட்டிருந்தனர். #WhatsNewThisDiwali மற்றும் #Citi ஆகிய ஹேஸ்டேக்குகள் மொத்தம் 70 லட்சம் பேரை சென்றடைந்திருந்தது.

English summary
Diwali is a largely celebrated festival of India. Also known as the festival of lights, Diwali is associated with shopping for oneself, family and friends, decorating homes, and exchanging gifts and sweets to lighten up the festive spirit.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X