For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நைட் நேரம்.. கிரீச்.. கிரீச்.. மெல்ல மெல்ல ஊர்ந்து.. படிகளை ஏறி தாண்டி.. திரும்பி பார்த்தால்.. ஷாக்

வீல்சேர் ஒன்று தானாக நகர்ந்து செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது

Google Oneindia Tamil News

Recommended Video

    மெல்ல மெல்ல ஊர்ந்து போன வீல் சேர்

    பஞ்சாப்: ஒருவேளை பேயா இருக்குமோ.. காற்று அடித்திருக்குமோ என்று பலவாறாக யூகங்கள் எழுந்து வருகின்றன. காரணம்.. ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்த ஒரு வீல் சேர் மட்டும் மெதுவாக நகர்ந்து.. ஊர்ந்து.. கேட் வரை செல்கிறது. இந்த சிசிடிவி காட்சிகளை கண்டு ஆளாளுக்கு அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர்.

    சண்டிகர் மாநிலத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. முதுநிலை மருத்துவ படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய ஆஸ்பத்திரி இயங்கி வருகிறது.

    Wheel Chair moves out of hospital individually in Chandigarh

    இங்கு வெளியில் உள்ள பகுதியில் சேர்கள் போடப்பட்டுள்ளன. அதில் 2 சேர்களுக்கு மத்தியில் ஒரு வீல் சேர் உள்ளது. ஆட்கள் யாருமே இங்கு தென்படவில்லை. முதலில், அந்த வீல்சேரை யாரோ பின்னுக்கு இழுப்பது போல தெரிகிறது. ஆனால் யாருமே அங்கு இல்லை. சிறிது நேரத்தில், அந்த வீல்சேர் மெல்ல நகர்ந்து முன்னோக்கி வருகிறது.

    அங்கு ஒரு சிறிய படிக்கட்டு போன்று உயர்ந்த பகுதி காணப்படுகிறது. அதனால் அந்த வீல்சேர் அப்படியே தடுக்கி நின்றுவிடும் என்று பார்த்தால், அதனையும் தாண்டி வருகிறது வீல்சேர். அப்படியே ஆஸ்பத்திரி கேட் இருக்கும் ரோடு வரை வந்து நிற்கிறது. இதை அங்கிருக்கும் நைட் டியூட்டி செக்யூரிட்டிகள் கண்டு ஷாக் ஆகிறார்கள்.

    ஆஸ்பத்திரியில் பதிவான இந்த சிசிடிவி காட்சிதான் இப்போது வெளியாகி உள்ளது. லேசான எடைகொண்ட சாதாரண சேர்கள் அங்கு போடப்பட்டுள்ள நிலையில் வீல் சேர் மட்டும் எப்படி நகர்கிறது என்று தெரியவில்லை. ஒருவேளை தரை வழுவழுப்பு காரணமாக அல்லது காற்றில் இப்படி நகர்ந்து வந்திருக்கும் என்று சொல்லப்படுகிறது. ஆனால், வீல் சேர் தானாக நகரும் திகில் காட்சி பரபரப்பை தந்துள்ளது.

    English summary
    Wheel Chair moves out of hospital individually in Chandigarh and this ccvt footage goes viral on soicals
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X