For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

120 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டம்.. அயோத்தி ராமர் கோவில் கட்டுமானம் நிறைவடைவது எப்போது தெரியுமா?

Google Oneindia Tamil News

அயோத்தி: அயோத்தியில் கட்டப்படவுள்ள பிரமாண்டமான ராமர் கோயிலுக்கு பூமி பூஜை ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளன. பூமி பூஜைக்கு இன்னும் ஒரு சில மணிநேரங்களே உள்ளது.

அயோத்தியில் எல்லா இடங்களிலும் தீபாவளி போன்ற மனநிலை காணப்படுகிறது. பூமி பூஜைக்காக அங்குள்ள மக்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அயோத்தி முழுவதும் ஒளிர்கிறது.

Recommended Video

    Ayodhya's Ram Temple Look | Style and Cost | Oneindia Tamil

    இந்த நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல விவிஐபிகள் விழாவில் கலந்து கொள்வார்கள். ஆனால் இப்போது அனைவரின் மனதிலும் உள்ள கேள்வி என்னவென்றால், இந்த பூமி பூஜைக்குப் பிறகு, இந்த மாபெரும் ராமர் கோயில் உருவாக எவ்வளவு காலம் தேவைப்படும் என்பதுதான்.

    அங்கிட்டு அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை.. இங்கிட்டு ட்விட்டரில் டிரெண்டிங்கான #LandOfRavanan அங்கிட்டு அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை.. இங்கிட்டு ட்விட்டரில் டிரெண்டிங்கான #LandOfRavanan

    பெரிய கோவில்

    பெரிய கோவில்

    120 ஏக்கர் பரப்பளவில் உலகிலேயே மூன்றாவது பெரிய கோவிலாக அயோத்தி ராமர் கோவில் உருவாகுகிறது. கோவிலை கட்டி முடிக்க ரூ.300 கோடி செலவாகும் என்றும், மேலும், கூடுதலாக, 20 ஏக்கர் பரப்பளவில் தேவையான வசதிகளை உருவாக்க ரூ.1000 கோடி வரையில் செலவாகும் என்றும் தெரிகிறது.

    பேட்டி

    பேட்டி

    கோவில் எப்போது கட்டி முடிக்கப்படும் என்பது குறித்து, ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த அறக்கட்டளையின் அறங்காவலர் சுவாமி பரமானந்த் மகாராஜ் ஒரு செய்தி நிறுவனத்துடன் பேசியுள்ளார். அவர் கூறியதாவது: அயோத்தியில் உள்ள கர்சேவக்புரத்தில் உள்ள பட்டறையில் தயாரிக்கப்பட்ட கற்கள் ராம் கோயில் கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும்.

    செங்கற்கள்

    செங்கற்கள்

    இந்த கற்கள் தவிர, அயோத்தியின் கர்சேவக்புரத்தில் வைக்கப்பட்டுள்ள செங்கற்கள் கோவில் கட்ட பயன்படுத்தப்படும். ராமர் கோவிலை கட்ட வேண்டும் என்பதற்காக, நாடு முழுக்க இருந்த கடந்த 30 வருடங்களாக அனுப்பப்பட்ட செங்கல்கள் இவை. இதில் பல்வேறு மொழிகளில் (தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட) ஸ்ரீராம் என்று பெயர் செதுக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்களால் அனுப்பப்பட்ட அந்த செங்கல்கள் பயபக்தியுடன் இங்கு பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. இந்த செங்கற்களுக்கு சிறப்பு பூஜை செய்யப்படும். பிறகு கோவில் கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும்.

    கோவில் நடை திறப்பு

    கோவில் நடை திறப்பு

    பூமி பூஜை ஆகஸ்ட் 5ம் தேதியான இன்று நடைபெறும் நிலையில், 2023ம் ஆண்டு, ராம் நவமியின் போது (மார்ச் மாதம்), கோயிலின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து பக்தர்களின் வழிபாட்டுக்கு கோவில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம். குழந்தை ராமர் உருவச் சிலையை, பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    English summary
    The question on everyone's mind is how long it will take after the Bhoomi Puja to build this huge Ram temple. Ayodhya Ram Temple is the third largest temple in the world spread over an area of ​​120 acres. The temple is expected to cost Rs 300 crore to complete and, in addition, up to Rs 1,000 crore to build the required facilities on the 20-acre site.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X