For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எது பேராபத்தான எமர்ஜென்சி? அறிவிக்கப்பட்டதா? அறிவிக்கப்படாததா? ட்விட்டரில் காங்-பாஜக குடுமிபிடி

அவசரநிலை தொடர்பாக ட்விட்டரில் காங்கிரஸ் பாஜக இடையே பரபர மோதல் நடைபெற்று வருகிறது.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    யாருடைய ஆட்சியில் எமெர்ஜெண்சி?..சண்டை போடும் காங்கிரஸ் பாஜக- வீடியோ

    டெல்லி: 1975-ல் அறிவிக்கப்பட்ட அவசரநிலை ஆபத்தானதா? தற்போதைய அறிவிக்கப்படாத எமர்ஜென்சி ஆபத்தானதா? என ட்விட்டரில் காங்கிரஸ், பாஜக இடையே மல்லுக்கட்டு நடந்து வருகிறது.

    1975-ம் ஆண்டு ஜூன் 25-ந் தேதி நள்ளிரவில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அவசர நிலை பிரகடனத்தை அமல்படுத்தினார். இந்த நாளை பாஜக, கறுப்பு நாளாக கடைபிடித்து வருகிறது.

    Which Emergency is more dangerous: declared or undeclared? BJP, Congress fight over it

    மேலும் ட்விட்டரில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அருண்ஜேட்லி உள்ளிட்டோர் அவசரநிலை கால சிறைவாச கொடூரங்களை பதிவு செய்து வருகின்றனர். இதன் அடுத்த கட்டமாக பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கங்கள் மல்லுக்கட்டை நடத்தி வருகின்றன.

    முதலில் காங்கிரஸ் கட்சி தமது ட்விட்டர் பக்கத்தில் காலையில், அறிவிக்கப்படாத மோடியின் எமர்ஜென்சி என்ற தலைப்பில் ஒரு பதிவைப் போட்டது. அதில், மோடி அரசில் ஜனநாயகம் சீர்குலைந்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

    இதற்கு பதிலடியாக பாஜக ட்விட்டர் பக்கத்தில், "1975ல் அறிவிக்கப்பட்ட அவசரநிலை சுதந்திர இந்தியாவின் இருண்டகாலம்" என எமர்ஜ்னெசியை விரிவிக்கும் இன்போகிராபிக்ஸுடன் ஒரு ட்விட்டர் பதிவைப் போட்டது. அடுத்தடுத்து காங்கிரஸை விமர்சிக்கும் பதிவுகளை பாஜக போடத் தொடங்கியது.

    இதனைத் தொடர்ந்து தொழிலதிபர்களின் வங்கி கடன் மோசடிகள் குறித்து காங்கிரஸ் மற்றொரு ட்வீட் பதிவு போட்டது. இப்படி பாஜகவும் காங்கிரஸும் மாறி மாறி ட்விட்டரில் குடுமிபிடி சண்டை போட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    As the Bharatiya Janata Party observed the 43rd anniversary of the Emergency, imposed by then Prime Minister Indira Gandhi, the Congress attacked the saffron party with "Prime Minister Narendra Modi's undeclared Emergency" jibe on Tuesday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X