For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பரபரக்கும் நம்பிக்கையில்லா தீர்மானம்.. பாஜகவிற்கு யாரெல்லாம் ஆதரவு.. உண்மையான பலம் என்ன?

மத்திய பாஜக அரசுக்கு எதிராக நாளை லோக்சபாவில் கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பாஜகவிற்கு ஆதரவாக வாக்களிப்போம் என்று சிவ சேனாவின் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய பாஜக அரசுக்கு எதிராக நாளை லோக்சபாவில் கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பாஜகவிற்கு ஆதரவாக வாக்களிப்போம் என்று சிவ சேனாவின் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். இதேபோல் இன்னும் சில கட்சிகள் பாஜகவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க வாய்ப்புள்ளது.

நாளை மத்திய பாஜக அரசுக்கு எதிராக லோக்சபாவில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட இருக்கிறது.சரியாக 15 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் லோக் சபாவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட இருக்கிறது.

லோக் சபாவில் மத்திய அரசுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட எதிர்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்றுக்கொண்டுள்ளார். தெலுங்கு தேசம் கட்சி சார்பாக கொண்டு வரப்பட்ட தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

சிவ சேனா ஆதரவு

சிவ சேனா ஆதரவு

இந்த நிலையில் இந்த தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்க மாட்டோம் என்று சிவ சேனா முடிவெடுத்துள்ளது. முன்னாள் நண்பர்களான சிவசேனாவும் பாஜகவும் இடையில் கொஞ்சம் பிரச்சனையில் இருந்தது. ஆனால் அதை பொருட்படுத்தாமல், நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பாஜக கட்சிக்கே ஆதரவு அளிப்போம் என்று சிவ சேனா தெரிவித்துள்ளது. சிவ சேனா கட்சிக்கு லோக் சபாவில் 18 எம்.பிக்களின் பலம் இருக்கிறது.

இன்றும் இரண்டு கட்சிகள்

இன்றும் இரண்டு கட்சிகள்

அதேபோல் பாஜகவிற்கு லோக் ஜன சக்தி கட்சி ஆதரவு அளிக்க இருக்கிறது. அந்த கட்சிக்கு 6 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். மேலும் சிரோன்மணி அகாலிதளம் பாஜகவரிக்கு ஆதரவு அளிக்கிறது. அந்த கட்சிக்கு 4 உறுப்பினர் பலம் இருக்கிறது. இன்னும் கடைசி நேரத்தில் வேறு சில கட்சிகள் ஆதரவளிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

பலம் என்ன

பலம் என்ன

தற்போதையை நாடாளுமன்ற பலம் 535. இதில் வெற்றிபெற 268 உறுப்பினர்கள் தேவை. பாஜகவிடம் தனியாகவே சபாநாயகரையும் சேர்த்து 274 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில் மேலே குறிப்பிட்ட கட்சிகளின் ஆதரவுடன் பாஜகவின் பலம் 313ஐ தொடுகிறது. இதனால் பாஜக கட்சிக்கு நாளைய வாக்கெடுப்பில் தோல்வியை தழுவ வாய்ப்பே இல்லை.

 அதிமுகவின் நிலைப்பாடு

அதிமுகவின் நிலைப்பாடு

ஏற்கனவே அதிமுக கட்சி இந்த வாக்கெடுப்பில் பாஜகவிற்கு ஆதரவு அளிக்கும் என்று மறைமுகமாக கூறியுள்ளது. இதனால் பாஜக நாளை வாக்கெடுப்பில் 350 வாக்குகளை தாண்ட வாய்ப்புள்ளது. சமயத்தில் அதிமுக யாருக்கும் ஆதரவு அளிக்காமல் வெளியேறவும் வாய்ப்பு இருக்கிறது.

English summary
The Shiv Sena, which shares an uneasy relationship with ally Bharatiya Janata Party on Thursday said it will not back the no-confidence motion moved by the Telugu Desam Party (TDP) against the NDA government at the Centre. The party has issued a whip for its MPs to be present during voting that will take place on Friday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X