For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வங்கியில் ரூ10 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தீர்களா? வருமானத்திற்கான ஆவணங்களை தயாரா வைங்க

By Mayura Akilan
Google Oneindia Tamil News

மும்பை: மத்திய அரசின் உயர் பண மதிப்பு நீக்க அறிவிப்புக்குப் பின்னர் வங்கிக் கணக்கில் ரூ10 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தவர்களின் வருமானத்துக்கான ஆவணங்களை கேட்க உள்ளது வருமான வரித்துறை.

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி கடந்த நவம்பர் 8ஆம் தேதியன்று இரவு முதல் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். இதையடுத்து தங்கள் வசம் உள்ள செல்லாத ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றவும், அதிகம் கைவசம் உள்ள பணத்தை டெபாசிட் செலுத்த மத்திய அரசு உத்தரவிட்டது.

இதனையடுத்து பலரும் தங்களின் வங்கிக்கணக்குகளில் லட்சக்கணக்கான பணத்தை டெபாசிட் செய்துள்ளனர். நாடு முழுவதும் 1.5 லட்சம் வங்கி கணக்குகளில் ரூ10 லட்சத்துக்கும் மேல் டெபாசிட் டெய்யப்பட்டுள்ளதாம்.

ஆதாரம் கேட்டும் வருமான வரித்துறை

ஆதாரம் கேட்டும் வருமான வரித்துறை

தற்போது இத்தகைய வங்கி கணக்காளர்களிடம் வருமானத்துக்கான ஆவணங்களை மத்திய அரசு கேட்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிரா, குஜராத், தமிழகம், கர்நாடகாவில் கூட்டுறவு வங்கிகளில் பெருமளவு பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாகவும் வருமான வரித்துறை விசாரிக்க இருக்கிறது.

வருமானவரி சோதனை

வருமானவரி சோதனை

உயர் பண மதிப்பிழப்பு அறிவிப்புக்கு பின்னர் நாடு முழுவதும் 1,100 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியது. அப்போது கணக்கில் வராத ரூ600 கோடி ரொக்கம் பிடிபட்டது. இதில் ரூ150 கோடி புதிய ரூபாய் நோட்டுகளாகும்.

பணம் டெபாசிட்

பணம் டெபாசிட்

இதனிடையே ஒரு கோடி அக்கவுண்டுகளில் சந்தேகத்திற்கு இடமான வகையில் பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. ஜன்தன் அக்கவுண்டுகளிலும் லட்சக்கணக்கான அளவில் பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக வங்கிக்கணக்கில் ரூ. 10 லட்சத்திற்கும் மேல் டெபாசிட் செய்தவர்களைப் பற்றி வருமான வரித்துறையினர் விசாரணை நடத்த உள்ளனர்.

கிடுக்கிப் பிடி விசாரணை

கிடுக்கிப் பிடி விசாரணை


மோடியின் செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்குப் பின்னர்,இரவோடு இரவாக செல்லாத ரூபாய் நோட்டுக்களை வைத்து அதிக அளவில் தங்கம், வைரம் உள்ளிட்ட பொருட்களை வாங்கிக் குவித்தவர்கள் பற்றியும் ரகசியமாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் வருமான வரித்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. வருமானம் வந்த வழி எப்படி? ஆவணங்களை ரெடியாக வைத்துக்கொள்ளுங்கள் மக்களே!

நன்றி : எகனாமிக்ஸ் டைம்ஸ்

English summary
The tax office will ask everyone who deposited more than Rs 10 lakh in their bank accounts after November 8 to spell out the source of money.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X