For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இன்போசிஸ் புதிய சிஇஓ சலில் எஸ். பரேக் யார் தெரியுமா?

இன்போசிஸ் நிறுவனத்தின் புதிய சிஇஓவாக நியமிக்கப்பட்டுள்ள சலில் எஸ்.பரேக்கின் பின்னணி என்ன என்று பார்க்கலாம்

By Gajalakshmi
Google Oneindia Tamil News

டெல்லி : இன்போசிஸ் நிறுவனத்தின் புதிய சிஇஓவாக நியமிக்கப்பட்டுள்ள சலில் எஸ். பரேக்கின் 25 ஆண்டுகளாக கேப்ஜெமினி நிறுவனத்துடன் இணைந்து செயலாற்றி வருகிறார். அண்மையில் தான் அவர் அந்த நிறுவனத்தில் செயல்பாட்டுக் குழுவின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஐடி நிறுவன ஜாம்பவானான இன்போசிஸ் தங்களது நிறுவனத்தின் புதிய சிஇஓ மற்றும் மேலாண்மை இயக்குனராக சலில் எஸ்.பரேக்கை அறிவித்துள்ளது. இவர் ஜனவரி 2, 2018 முதல் 5 ஆண்டுகளுக்கு அந்த பொறுப்பில் இருப்பார்.

Who is Salil S. Parekh, here is the background of him?

பரேக் கேப் ஜெமினியில் 25 ஆண்டுகளாக செயலாற்றி வருகிறார். அண்மையில் தான் இவர் அந்த நிறுவனத்தின் செயல்குழுவின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பரேக் வட அமெரிக்க எக்சிக்யூட்டிவ் கவுன்சிலின் தலைவராகவும் உள்ளார். 2000ம் ஆண்டு கேப் ஜெமினியில் பணியில் சேர்ந்த பரேக் திறமையான செயல்பாடுகள் மற்றும் உத்வேகமான தலைமைப் பண்பு காரணமாக நிறுவனத்தின் பல்வேறு உயர் பொறுப்புகளை வகித்துள்ளார்.

படிப்பிலும் கெட்டிக்காரரான பரேக் இளநிலை ஏரோநாடிகல் பொறியியல் படிப்பை மும்பையிலும் முதுநிலை பட்ட படிப்புகளை கார்னெல் பல்கலைக்கழகத்திலும் பயின்றுள்ளார்.

பரேக் 3 ஐடி துறையில் 3 தலைமுறை அனுபவம் கொண்டவர் என்று இன்போசிஸ் குழுமத் தலைவர் நந்தன் நீலகேனி பாராட்டியுள்ளார். ஐடி துறை மாற்றத்தை சந்தித்து வரும் இத்தகைய காலகட்டத்தில் பரேக்கின் நியமனம் நிச்சயம் இன்போசிஸ் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவும் என்றும் அவர் பாராட்டியுள்ளார்.

English summary
Salil S. Parekh who has been selected as new ceo and MD for Infosys has three decades of experience in IT industry and he was with Capgemnini for over 25 years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X