For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சப்தமின்றி சட்ட போராட்டத்தால் சாதித்த உத்தவ் தாக்கரே.. சிவசேனாவின் முதல் முதல்வர்.. யார் இவர்?

Google Oneindia Tamil News

Recommended Video

    ஆதித்யா தாக்கரேவின் தியாகம் .. என்ன பின்னணி?

    மும்பை: மகாராஷ்டிராவின் முதல்வராக பதவியேற்பதன் மூலம் தந்தையின் கனவை நனவாக்கியுள்ளார் உத்தவ் தாக்கரே. சிவசேனாவின் முதல் முதல்வரும் இவரே.

    மகாராஷ்டிராவில் பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் கடந்த 23-ஆம் தேதி பாஜக தலைமையில் ஆட்சி அமைந்தது. அஜித் பவாரை நம்பி இறங்கிய நிலையில் இறுதியில் பெரும்பான்மை நிரூபிக்க செல்லாமலேயே பாஜக அரசு கவிழ்ந்தது.

    இந்த நிலையில் சிவசேனா- காங்கிரஸ்- என்சிபி கூட்டணி உறுதியானது. இதையடுத்து உத்தவ் தாக்கரேவை முதல்வராக தேர்வு செய்ய கருத்தொற்றுமை ஏற்பட்டது. இதையடுத்து அவர் முதல்வராக இன்று பதவியேற்கிறார்.

    பால்தாக்கரே

    பால்தாக்கரே

    முதல்வர் பதவிக்காக பெரும் சட்ட போராட்டம் நடத்திய உத்தவ் தாக்கரே, யார் இவர்? கடந்த 1960-ஆம் ஆண்டு ஜூலை 27-ஆம் தேதி பிறந்தார். இவரது தந்தை பால் தாக்கரே. மகாராஷ்டிரா என்றாலே சிவசேனா என்று நினைவுக்கு வரும்படியாக கட்சியை முன்னெடுத்தவர் பால் தாக்கரே.

    சிவசேனாவின் செயல்தலைவர்

    சிவசேனாவின் செயல்தலைவர்

    உத்தவ் தாக்கரே 2002-ஆம் ஆண்டு பிருஹன் மும்பை மாநகராட்சி தேர்தலில் சிவசேனாவை வெற்றி பெற செய்தார். இதைத் தொடர்ந்து ஜனவரி 2003-ஆம் ஆண்டு முதல் சிவசேனாவின் செயல்தலைவராக பதவி வகித்து வருகிறார்.

    ராஜ் தாக்கரே

    ராஜ் தாக்கரே

    இவருக்கும் சிவசேனா முன்னாள் மூத்த தலைவருமான நாராயண் ரானேவுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து ரானே கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அது போல் உத்தவ் தாக்கரேவுக்கும் அவரது உறவினர் ராஜ் தாக்கரேவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கடந்த 2006-இல் விலகிய ராஜ் தாக்கரே மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா என்ற புதிய கட்சியை தொடங்கினார்.

    லீலாவதி மருத்துவமனை

    லீலாவதி மருத்துவமனை

    உத்தவ் தாக்கரேவுக்கு மனைவி ராஷ்மியும் மகன்கள் ஆதித்யா மற்றும் தேஜாஸ் ஆகியோர் உள்ளனர். இதில் மூத்த மகன் ஆதித்யா இளைஞரணித் தலைவராக உள்ளார். இளையமகன் நியூயார்க்கில் கல்லூரியில் படிப்பதாக கூறப்படுகிறது. கடந்த 2012-ஆம் ஆண்டு உத்தவ் தாக்கரேவுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு அவர் லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    புகைப்படம் எடுத்தல்

    புகைப்படம் எடுத்தல்

    பின்னர் அவருக்கு ஆன்ஜியோபிளாஸ்ட் செய்யப்பட்டு இதயத்தில் இருந்த 3 அடைப்புகள் முற்றிலும் அகற்றப்பட்டது. சட்ட போராட்டத்தால் முதல்வராக பதவியேற்கும் உத்தவ் தாக்கரேவுக்கு போட்டோகிராப்பி எடுப்பதில் அதிக ஆர்வம் உண்டு.

    புகைப்பட கண்காட்சி

    புகைப்பட கண்காட்சி

    கடந்த 2004-ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் உள்ள பல்வேறு கோட்டைகளின் வான்வழி காட்சிகளை ஜஹாங்கீர் கலை அரங்கத்தில் காட்சிப்படுத்தினார். அத்தோடு மகாராஷ்டிரா தேஷ், பஹவா வித்தல் ஆகிய புகைப்பட புத்தகங்களை வெளியிட்டுள்ளார்.

    உத்தவ் தாக்கரே

    உத்தவ் தாக்கரே

    மகாராஷ்டிரா மராட்டியர்களுக்கே என முழங்கியவர் சிவசேனாவின் நிறுவனர் பால் தாக்கரே. மாநிலத்தின் வளர்ச்சிக்காக சிவசேனாவை சேர்ந்தவர் முதல்வராக வரவேண்டும் என்பது பால் தாக்கரேவின் கனவு, அந்த கனவு இன்று உத்தவ் தாக்கரே மூலம் நனவாகிறது.

    English summary
    Who is Uddhav Thackarey? who is going to be CM of Maharastra after legal protests against BJP who formed government on last Saturday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X