For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜிகா தாக்கிய நாட்டுக்கு போனவங்க கிட்ட 6 மாதத்துக்கு 'அது' வச்சுக்க கூடாது- ஹூ

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: ஜிகா நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் இருந்து வருபவர்கள் 8 வாரத்துக்கு ஆணுறை பயன்படுத்தி தாம்பத்தியத்தில் ஈடுபடலாம் என உலக சுகாதார நிறுவனம் ஏற்கனவே கூறி இருந்தது. ஆனால், இப்போது 6 மாதத்துக்கு அவர்கள் தாம்பத்யத்தில் ஈடுபட கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது.

ஜிகா வைரஸ் காய்ச்சல் நோய் பிரேசில் உள்ளிட்ட அமெரிக்க நாடுகளில் பரவியது. தற்போது மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் பரவி வருகிறது. 60 நாடுகளில் இந்த நோயின் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஒரு வகை கொசுவினால் இந்த நோய் பரவுகிறது.

இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் இருந்து வருபவர்கள் 8 வாரத்துக்கு ஆணுறை பயன்படுத்தி தாம்பத்தியத்தில் ஈடுபடலாம் என உலக சுகாதார நிறுவனம் ஏற்கனவே கூறி இருந்தது. ஆனால், இப்போது 6 மாதத்துக்கு அவர்கள் தாம்பத்யத்தில் ஈடுபட கூடாது என்று கூறி இருக்கிறது.

உயிரணுக்களில் ஜிகா வைரஸ்

உயிரணுக்களில் ஜிகா வைரஸ்

இத்தாலியை சேர்ந்த ஒருவர் ஜிகா வைரஸ் நோய் பாதித்த இடத்தில் இருந்து வந்திருந்தார். அவருடைய உயிரணுவில் 6 மாதத்துக்கு பிறகும் ஜிகா வைரஸ் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே, உலக சுகாதார நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

உடல் உறவு

உடல் உறவு

சிலருக்கு ஜிகா வைரஸ் தாக்கினால் அது வெளியே தெரிய வரும். சிலருக்கு அறிகுறியே தெரியாது. எனவே, நோய் பாதிப்பு பகுதிகளில் இருந்து வந்தவர்கள் நிச்சயமாக 6 மாதத்துக்கு உடல் உறவை தவிர்க்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறி இருக்கிறது.

வைரஸ் பாதிப்பு

வைரஸ் பாதிப்பு

உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் 'ஜிகா' வைரஸ் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பரவக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென்அமெரிக்கா, மத்திய அமெரிக்கா, கரிபீயன் நாடுகளில் ஜிகா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. அமெரிக்காவின் சில பகுதிகளிலும் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

குறையான குழந்தைகள்

குறையான குழந்தைகள்

சிங்கப்பூரிலும் ஜிகா வைரஸ் தாக்கியுள்ளது. இதுவரை 25 நாடுகளில் வைரஸ் பாதிப்பு உள்ளது. அந்த நாடுகளில் 40 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜிகா வைரஸ் பாதித்த கர்ப்பிணிகளுக்கு சிறிய தலை, மூளை பாதிப்பு, பார்வை குறைபாடு, நரம்பு மண்டல பாதிப்புகளுடன் குழந்தைகள் பிறக்கின்றன. இதனால் இப்போதைக்கு பெண்கள் கருத்தரிக்க வேண்டாம் என்று பிரேசில் உள்ளிட்ட நாடுகள் அறிவுறுத்தியுள்ளன.

நோய் பாதிப்பு

நோய் பாதிப்பு

ஜிகா வைரஸால் பாதிக்கப் பட்டவருக்கு காய்ச்சல், மூட்டுவலி, கண்களில் எரிச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் காணப்படுகின்றன. இந்த வைரஸால் இதுவரை யாரும் உயிரிழந்ததாக தகவல் இல்லை. ஆனால் இதன் பாதிப்புகள் உலக நாடுகளை அச்சுறுத்துகின்றன. ஜிகா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மூளை பாதிக்கப்பட்டு அவர்களுக்கு பக்கவாதம் ஏற்படுகிறது. குழந்தைகள் குறைபாடுகளுடன் பிறக்கின்றன. இதுவரை இந்த வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாததால் முறையான சிகிச்சை அளிக்க முடியவில்லை.

ஏடிஎஸ் கொசுக்கள்

ஏடிஎஸ் கொசுக்கள்

டெங்கு, சிக்குன்குனியா காய்ச்சலுக்கு காரணமான ஏடிஎஸ் கொசுக்களே ஜிகா வைரஸையும் பரப்பி வருகின்றன. இதனால் இந்த வகை கொசுக்கள் அதிகமா காணப்படும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் ஜிகா வைரஸ் பரவக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு எச் சரிக்கை விடுத்துள்ளது.

உடல் உறவு மூலமும் ஜிகா வைரஸ் பரவுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கர்ப்பிணிகளுக்கு எச்சரிக்கை

கர்ப்பிணிகளுக்கு எச்சரிக்கை

தென்அமெரிக்க நாடுகளில் இருந்து தாய்லாந்து, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளிலும் ஜிகா வைரஸ் பரவியிருப்பது அண்மை யில் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே இந்தியா மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக கர்ப்பிணிகள், லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று இந்திய மருத்துவ கூட்டமைப்பு (ஐஎம்ஏ) அறிவுறுத்தியுள்ளது.

6 மாதத்திற்கு நோ செக்ஸ்

6 மாதத்திற்கு நோ செக்ஸ்

ஜிகா நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் இருந்து வருபவர்கள் 8 வாரத்துக்கு ஆணுறை பயன்படுத்தி தாம்பத்தியத்தில் ஈடுபடலாம் என உலக சுகாதார நிறுவனம் ஏற்கனவே கூறி இருந்தது. ஆனால், இப்போது 6 மாதத்துக்கு அவர்கள் தாம்பத்யத்தில் ஈடுபட கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது.

English summary
The World Health Organization on Tuesday toughened its advice on preventing the spread of Zika, saying anyone returning from areas hit by the virus should practise safe sex for six months afterwards.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X