For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தொடர வேண்டுமா உன்னத வீரர்களின் உயிரிழப்புகள்? சிஆர்பிஎஃப் தலைவர் நியமனம்தான் எப்போது?

சிஆர்பிஎஃப் எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கு கடந்த 2 மாதங்களாக தலைமை இல்லாததால் எந்த முடிவையும் எடுக்க முடியாமல் இப்போது 26 வீரர்களை இழந்துவிட்டோம்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

டெல்லி: சிஆர்பிஎஃப் எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கு கடந்த 2 மாதங்களாக தலைவரை நியமிக்காததால் எந்த ஒரு முடிவுகளையும் எடுக்க முடியாமல் இப்போது 26 வீரர்களை இழந்துள்ளோம்.

சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு மறைந்திருந்த மாவோயிஸ்டுகள், நமது வீரர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.

Why appointing a CRPF head should be government's top priority

இதில் தமிழக வீரர்கள் உள்பட 26 பேர் வீரமரணமடைந்தனர். இந்த பிரச்சினையை மேலோட்டமாக பார்த்தோமேயானால் மாவோயிஸ்டுகள் தாக்குதலில் வீரர்கள் இறந்திருப்பது மட்டுமே தெரியும். ஆனால் கூர்ந்து கவனித்தால் மட்டுமே உண்மை விளங்கும்.

எந்த ஒரு அமைப்பானாலும் தலைமை இல்லாமல் இயங்குவது இயலாத காரியம். அந்த வகையில் சிஆர்பிஎஃப் படைக்கு கடந்த 2 மாதங்கள் தலைவர் என்பவர் யாரும் நியமிக்கப்படவில்லை. மத்திய உள்துறை அமைச்சகமோ சிஆர்பிஎஃப் படைக்கு புதிய இயக்குநரை விரைவில் நியமிப்பதாக கூறுகிறது.

ஆனால் அதுகுறித்து அதிகாரப்பூர்வமான தகவல் ஏதும் இதுவரை வெளியிடப்படவில்லை என்று சிஆர்பிஎஃப் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் சிஆர்பிஎஃப் படையை சேர்ந்த 40 வீரர்களை இதுவரை இழந்துவிட்டோம்.

இந்த படைக்கு தலைவராக இருந்த கே.துர்கா பிரசாத் ஓய்வு பெற்றதை அடுத்து தற்போது தகுதியான தலைவரை நியமிக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஆலோசனை இன்னமும் நடத்தி வருகிறது. சுதீர் லக்டாகி என்பவரை பொறுப்பு தலைவராக நியமித்துள்ளது.

தற்போதைய நிலையில் சிஆர்பிஎஃப் படைக்கு தலைவரை நியமிப்பதில் அலட்சியம் காட்டி வரும் மத்திய அரசால் இன்னும் எத்தனை வீரர்களை அந்த படை இழக்க போகிறது என்று தெரியவில்லை.

English summary
The absence of a chief has hurt the CRPF bad. Only a full-time chief can take important policy decisions and this helps in crunch situations.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X