For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காந்த குவியல்.. ஐஸ் பாறைகள்.. சந்திரயான் 2வை நிலவின் தென் துருவத்திற்கு அனுப்ப இப்படி ஒரு காரணமா!

பல்வேறு மர்மங்கள் நிறைந்து இருக்கும் நிலவின் தென் துருவத்தை நோக்கி சந்திரயான் 2 இன்று பயணம் மேற்கொள்ள இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    விண்ணில் பாய தயாராகும் சந்திரயான் 2.. நிலவின் தென்துருவத்தை ஆராயும்

    டெல்லி: பல்வேறு மர்மங்கள் நிறைந்து இருக்கும் நிலவின் தென் துருவத்தை நோக்கி சந்திரயான் 2 இன்று பயணம் மேற்கொள்ள உள்ளது. நிலவின் தென் துருவம் யாரும் நினைத்து பார்க்க முடியாத பல ஆச்சர்யங்களை சுமந்து இருக்கிறது.

    சந்திரயான் 2 இன்று விண்ணில் ஏவப்பட உள்ளது. ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் இன்று சந்திரயான் 2 சரியாக மதியம் 2.43 மணிக்கு விண்ணில் ஏவப்படும்.

    நிலாவின் தென் துருவ பகுதியை ஆராய்ச்சி செய்வதற்காக சந்திரயான் 2 ஏவப்படுகிறது. சந்திரயான் 2வில் ஒரு ஆர்பிட்டர் (நிலவை சுற்றி வரும்), லேண்டர் மற்றும் ஒரு ரோவர் இடம்பெற்று இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    உலகின் சக்தி வாய்ந்த விடுதலை புலிகள்.. கொள்ளையடித்தவர்களை கொல்லுங்கள்.. காஷ்மீர் ஆளுநர் பரபர பேச்சுஉலகின் சக்தி வாய்ந்த விடுதலை புலிகள்.. கொள்ளையடித்தவர்களை கொல்லுங்கள்.. காஷ்மீர் ஆளுநர் பரபர பேச்சு

    இன்று செல்கிறது

    இன்று செல்கிறது

    கடந்த வாரம் திங்கள் கிழமை அதிகாலை 2.59 மணிக்கு சந்திரயான் 2 விண்ணில் ஏவப்படுவதாக இருந்தது. ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடைசி நேரத்தில் இந்த திட்டம் கைவிடப்பட்டது. இந்த நிலையில் அந்த பிரச்சனைகள் சரி செய்யப்பட்டு இன்று விண்ணில் ஏவப்பட உள்ளது.

    தென் துருவம்

    தென் துருவம்

    நிலவின் தென் துருவத்தை குறி வைத்து தற்போது சந்திரயான் 2 விண்ணில் ஏவப்படுகிறது. அங்கு சந்திரயான் 2 தனது ரோவர் பிரக்யானை களமிறக்கி ஆராய்ச்சி செய்ய இருக்கிறது. ஆம் விக்ரம் என்ற லேண்டர் மூலம் பிரக்யான் என்று ரோவரை நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 2 களமிறக்கும். இந்த நிலவின் தென் துருவம் எப்போதும் சுவாரசியமும், பல புதிர்களும் நிறைந்த ஒன்றாகும்.

    லேசாக மாறியது

    லேசாக மாறியது

    பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நிலவின் சுற்றுப்பாதையில் சிறிய மாற்றம் ஏற்பட்டது. அப்போது நிலவின் முழு தென் பகுதியும் சூரிய வெளிச்சம் படாமல் இருந்தது. ஆனால் இயற்கையில் ஏற்பட்ட மாற்றம் நிலவின் சுற்றுப்பாதையில் 5 டிகிரி மாற்றம் ஏற்பட வைத்தது. இதனால் நிலவின் தென் துருவத்தில் சில இடங்களில் சூரிய வெளிச்சம் பட்டது.

    இதுதான் காரணம்

    இதுதான் காரணம்

    பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட இந்த சிறிய மாற்றம்தான் நிலவில் தற்போது நடக்கும் ஆராய்ச்சிக்கு எல்லாம் காரணம். ஆம் அப்போது ஏற்பட்ட சிறிய மாற்றத்தால் நிலவின் அடி அடியாழத்தில் இருந்த ஐஸ் கட்டிகள் சில உருகியது. இதைத்தான் சந்திரயான் 1 கண்டுபிடித்து, நிலவில் தண்ணீர் இருக்கிறது என்று கூறியது. இதுவே சந்திரயான் 2 திட்டத்திற்கு அடித்தளம் அமைத்தது.

    சூரியன் படாத இடம்

    சூரியன் படாத இடம்

    இந்த நிலையில் தற்போது சந்திரயான் 2 இன்னும் தென் துருவத்தை நோக்கி செல்கிறது. இதுவரை எந்த ஒரு விண்கலமும், ரோவரும், ஆர்பிட்டரும் செல்லாத இடத்திற்கு சந்திரயான் 2 செல்ல உள்ளது. இந்த தென் துருவத்தில் சில பகுதிகள் கொஞ்சம் கூட சூரியனே படாத இடங்கள் ஆகும். இங்கு மிக மோசமான உறை நிலை காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஐஸ் இருக்கும்

    ஐஸ் இருக்கும்

    இந்த தென் துருவம் முழுக்க ஐஸ் குவியல்கள் இருக்கும். இந்த ஐஸ் குவியல்களைத்தான் தற்போது சந்திரயான் 2 வின் பிரக்யான் ரோவர் ஆராய்ச்சி செய்ய உள்ளது. இந்த ஐஸ் கட்டியை வைத்து அங்கு இருக்கும் தண்ணீர் அளவு, உயிரினம் வாழ ஏற்ற சூழ்நிலை உள்ளதா என்பது எல்லாம் குறித்து தொடர்ந்து ஆராய்ச்சி செய்யப்படும்.

    அடியில் காந்தம்

    அடியில் காந்தம்

    அட, இங்கு ஐஸ் கட்டி மட்டுமில்லாமல், நமது சூரிய குடும்பம் உருவான போது ஏற்பட்ட மோதல் காரணமாக நிலவின் தென் துருவத்தில் நிறைய காந்தமும் இருக்கிறது. ஆனால் இது வெளிப்படையாக வெளியே இல்லாமல் காந்த குவியல்களாக நிலவின் அடியில் தென் துருவத்தில் உள்ளது. நிலவின் வட துருவத்தில் இந்த காந்தம் காணப்படுவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    வேறு என்ன இருக்கும்

    வேறு என்ன இருக்கும்

    இது இல்லாமல் அதிக அளவு ஹைட்ரஜன் மற்றும் நிலவு உருவான நேரத்தில் அதில் படிந்த பொருட்கள் எல்லாம் இந்த தென் துருவத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூரிய ஒளியே படாத காரணத்தால் நிலவு உருவான நேரத்தில் என்ன எல்லாம் இருந்ததோ அதெல்லாம் அப்படியே இங்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    என்ன சிறப்பு

    என்ன சிறப்பு

    இதுதான் நிலவின் தென் துருவத்தை இஸ்ரோ குறிவைக்க காரணம் என்கிறார்கள். வேறு எந்த ஒரு நாடும் நிலவின் கடைசி தென் முனைக்கு இப்படி ரோவரை அனுப்பியது கிடையாது. முதல்முறையாக இந்தியா அந்த சாதனையை செய்கிறது. செப்டம்பர் 6 அல்லது 7ம் தேதி பிரக்யான் ரோவர் நிலவில் இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    Why Chandrayaan-2 mission is focusing on the South Pole of the moon? - Here is the reason.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X