For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அணு மின் உற்பத்தியில் இந்தியா முன்னணி.. கூடங்குளம் அணு மின் நிலையம் மீது சைபர் தாக்குதல் ஏன்?

Google Oneindia Tamil News

Recommended Video

    கூடங்குளம் கணினியை ஹேக் செய்தது வடகொரியா: தென்கொரியா தகவல்

    டெல்லி: தோரியம் மூலப்பொருளை கொண்டு அணுமின் உற்பத்தியில் இந்தியா முன்னணி வகித்து வருவதால் இது தொடர்பான தகவல்களை திருடவே கூடங்குளம் அணு மின் நிலையம் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது.

    கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள கணினிகள் ஹேக்கிங் செய்யப்பட்டுவிட்டன. இதனால் இங்கு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சைபர் தாக்குதல் வடகொரியா ஹேக்கர்கள் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

    இது தொடர்பாக தென்கொரியா ஆதாரங்களுடன் வடகொரியாவின் முகத்திரையை கிழித்தெறிந்துள்ளது.

     கூடங்குளம் அணுமின் நிலைய கணினியை ஹேக் செய்தது வடகொரியாதான்.. ஆதாரத்தை முன் வைத்த தென்கொரியா! கூடங்குளம் அணுமின் நிலைய கணினியை ஹேக் செய்தது வடகொரியாதான்.. ஆதாரத்தை முன் வைத்த தென்கொரியா!

    சைபர் தாக்குதல்

    சைபர் தாக்குதல்

    தென் கொரியா முன் வைத்த ஆதாரத்தில் தோரியம் மூலப்பொருள் குறித்து முக்கியமாக பேசப்பட்டுள்ளது. அதாவது தோரியம் மூலப்பொருளை கொண்டு அணு மின் தயாரிப்பில் இந்தியா முன்னணி வகிக்கிறது. இதனால் அந்த ரகசியத்தை திருடவே இந்த சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

    அமெரிக்கா

    அமெரிக்கா

    யுரேனியம், தோரியம் உள்ளிட்ட பொருள்களை வைத்துதான் அணுக்கரு உலைகளில் மின்னாற்றல் உருவாக்க முடிகிறது. யுரேனியத்தின் முக்கிய பொதுமக்களின் பயன்பாடானது அணுசக்தி நிலையங்களில் வெப்ப ஆற்றல் மூலமாக உள்ளது. உலகில் அதிக அணு உலைகளை கொண்ட நாடு அமெரிக்காதான். இங்கு 440 அணு உலைகள் உள்ளன. இதற்கடுத்த இடத்தில் பிரான்ஸ், ஜப்பான் ஆகியன உள்ளன.

    மின்சாரம்

    மின்சாரம்

    இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளிலும் அணு உலைகள் காணப்படுகின்றன. இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, தென்னாப்பிரிக்கா, பிரேசில், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் தோரியம் அதிக அளவில் கையிருப்பு உள்ளது. இவற்றை கொண்டு அணு உலைகள் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.

    அணுக்கழிவு

    அணுக்கழிவு

    தோரியம் மூலப்பொருளை அணு உலைகளில் பயன்படுத்துவது பாதுகாப்பானதாகும். இது யுரேனியத்தை காட்டிலும் 3 மடங்கு இயற்கையாகவே கிடைக்கப்படுகிறது. கேரளம், ஜார்க்கண்ட், பீகார், தமிழகம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தோரியம் கிடைக்கிறது. தோரியம் உலைகளால் வெளியிடப்படும் அணுக்கழிவு குறைவானதாகும்.

    இந்தியா

    இந்தியா

    அது போல் அதில் கதிரியக்கத் தன்மையும் குறைவானதாகும். இதனால்தான் இந்தியா தோரியம் உலைகளை அதிகம் பயன்படுத்துகிறது. மேலும் மற்ற நாடுகளிலிருந்து யுரேனியத்தை இறக்குமதி செய்வதை காட்டிலும் இயற்கையாக கிடைக்கும் தோரியத்தை மூலப்பொருளாக வைத்து மின் உற்பத்தியில் இந்தியா ஈடுபடுகிறது. எனவே தோரியம் மூலப்பொருளை கொண்டு அணு மின் உற்பத்தி குறித்த தகவல்களை தெரிந்து கொள்ளவே கூடங்குளம் அணுமின் நிலையம் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

    English summary
    Why Cyber attack on Kudankulam power station? Here are the reasons behind the attack.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X