For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜார்க்கண்ட் உதயமாகி 19 ஆண்டுகள்.. ஆண்டது 15 ஆண்டுகள்.. பாஜகவின் திடீர் தோல்விக்கு காரணம் என்ன?

Google Oneindia Tamil News

Recommended Video

    ஜார்க்கண்ட் தேர்தலில் பாஜகவின் பின்னடைவுக்கு இதான் காரணமா ?

    ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம் உதயமாகி 19 ஆண்டுகள் ஆன நிலையில் இங்கு பாஜக 15 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளது. எனினும் தற்போது நடந்து முடிந்த தேர்தலில் தோல்வி அடைந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மொத்தம் 81 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த நவம்பர் 30-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ்- ஜேஎம்எம்- ஆர்ஜேடி கூட்டணி 47 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜகவோ வெறும் 25 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

    ஜார்க்கண்ட் மாநிலம் உருவாகி 19 ஆண்டுகள் ஆன நிலையில் 15 ஆண்டுகளுக்கு பாஜகவே ஆட்சி செய்துள்ளது. இதிலிருந்து அந்த மாநிலத்தில் பாஜகவின் பலத்தை நம்மால் அறிந்து கொள்ள முடியும். அப்படிப்பட்ட பாஜக இந்த தேர்தலில் ஜேஎம்எம்- காங்கிரஸ்- ஆர்ஜேடி கூட்டணியிடம் தோல்வி அடைந்துள்ளது.

    குடியுரிமை சட்ட போராட்டத்தில் பங்கேற்ற சென்னை ஐஐடியின் ஜெர்மன் மாணவர் நாட்டை விட்டு வெளியேற உத்தரவுகுடியுரிமை சட்ட போராட்டத்தில் பங்கேற்ற சென்னை ஐஐடியின் ஜெர்மன் மாணவர் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு

    பாஜக முன் வைத்தது

    பாஜக முன் வைத்தது

    இதற்கு முக்கிய காரணமாக பழங்குடியினர் மாநிலத்தில் அந்த சமூகத்தை சாராத ஒருவர் முதல்வர் வேட்பாளராக பாஜக சார்பில் நிறுத்தப்பட்டதே என சொல்லப்படுகிறது. தேர்தல் பிரசாரத்தில் ஒட்டுமொத்த இந்தியாவின் பிரச்சினைகளான ராமர் கோயில், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கம் உள்ளிட்டவற்றை பாஜக முன்வைத்தது.

    தவறிவிட்டது

    தவறிவிட்டது

    ஆனால் காங்கிரஸ் கூட்டணியோ ஜார்க்கண்டில் அந்த மாநில மக்கள் சந்திக்கும் அன்றாட பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாக வாக்குறுதி அளித்தது. காங்கிரஸ் கூட்டணிக்கு இணையாக ஒரு நல்ல கூட்டணியை பாஜக உருவாக்க தவறிவிட்டதாகவே கூறப்படுகிறது.

    போட்டியிடுவது

    போட்டியிடுவது

    கடந்த தேர்தலில் பாஜகவின் கூட்டணியில் இருந்த ஏஎஸ்ஜேயு இந்த தேர்தலில் 20 இடங்களை கேட்டது. ஆனால் பாஜகவோ அக்கட்சிக்கு 15 இடங்களை தர மறுத்துவிட்டது. இதனால் தனித்து போட்டியிடுவது என்ற முடிவுக்கு பாஜக வந்துவிட்டது.

    பாஜக ஆட்சி

    பாஜக ஆட்சி

    கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தலில் இரு கட்சியும் இணைந்து 35 சதவீத வாக்குகளை பெற்றன. அதாவது பாஜக 31%, ஏஜேஎஸ்யு 4 %. ஆனால் இந்த முறை பாஜக 34 சதவீதமும் ஏஜேஎஸ்யு 9 சதவீதமும் வாக்குகளை பெற்றுள்ளது. ஒரு வேளை அக்கட்சி கேட்ட 20 சீட்டுகளை பாஜக கொடுத்திருந்தால் இந்த முறை பாஜக ஆட்சியை தக்க வைத்திருக்கும் என சொல்லப்படுகிறது.

    முதல்வர் வேட்பாளர்

    முதல்வர் வேட்பாளர்

    பழங்குடியினர் அல்லாத ரகுபர் தாஸ் முதல்வர் வேட்பாளர் என்பது ஒருபுறம் இருந்தாலும் அவர் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் இந்த பாஜக தோல்வி அடைந்தது. தற்போது பாஜக ஆளும் மாநிலங்களின் மேப்பும் சுருங்கிவிட்டது.

    பாஜக தோல்வி

    பாஜக தோல்வி

    மேற்கில் ராஜஸ்தானிலிருந்து கிழக்கில் உள்ள மேற்கு வங்கத்துக்கு பாஜக ஆளும் மாநிலங்கள் வழியாக செல்லாமலேயே ஒருவர் பயணம் செய்ய முடியும். மேலும் பொருளாதார வீழ்ச்சியும் நாடு தழுவிய போராட்டங்களும் பாஜகவை தோல்வி அடைய செய்திருக்கும் என தெரிகிறது.

    English summary
    Here are the reasons Why did BJP loses in Jharkhand assembly elections 2019?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X