For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிவந்த கண்கள்.. "அசோக்க்க்.. ஏன் இப்படி செய்தார்?".. கோபத்தின் உச்சிக்கே சென்ற சோனியா.. என்ன நடந்தது

Google Oneindia Tamil News

சண்டிகர்: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மீது இடைக்கால காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. அவர் ஏன் இப்படி செய்தார்? என்று சோனியா கோபமாக கேட்டதாக கூறப்படுகிறது.

பொதுவாக சோனியா காந்தி கோபம் அடைய கூடிய நபர் கிடையாது. தனது கோபத்தை அவர் பொதுவில் வெளிப்படுத்தியது இல்லை. மிகப்பெரிய அரசியல் வெற்றிகளை கண்டபோதும் சரி.. அரசியல் தோல்விகளை கண்டபோதும் சரி.. அவர் உணர்ச்சிகளை வெளிப்படுத்தியதே இல்லை.

ஆனால் அப்படிப்பட்ட சோனியா காந்தி.. தனக்கு நெருக்கமான அசோக் கெலாட் மீது கோபம் அடைந்ததாக காங்கிரஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. அசோக் கெலாட் நீண்ட கால, பாரம்பரிய காங்கிரஸ் உறுப்பினர். இந்திரா காந்தி காலத்து காங்கிரஸ் தலைவர் அசோக் கெலாட்.

சக்ஸஸ்! 6.3 மில்லியன் மைல்ஸ் தொலைவில்.. விண்கல்லை துல்லியமாக தாக்கிய நாசாவின் சக்ஸஸ்! 6.3 மில்லியன் மைல்ஸ் தொலைவில்.. விண்கல்லை துல்லியமாக தாக்கிய நாசாவின்

விசுவாசி

விசுவாசி

கட்சியின் தீவிர விசுவாசி, மூத்த தலைவர். மத்திய சுற்றுலா மற்றும் விமான துறை அமைச்சராக செயல்பட்டுள்ளார். இந்திரா காந்திக்கு மட்டும் நெருக்கமாக இல்லாமல் ராஜிவ் காந்தி, சோனியா காந்திக்கும் நெருக்கமானவராக இருந்துள்ளார். இதற்கு முன் ராகுல் காந்தியை காங்கிரஸ் தலைவராக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தவரும் அசோக் கெலாட்தான். இவரைத்தான் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக்க வேண்டும் என்று சோனியா - ராகுல் ஆகியோர் திட்டம் போட்டனர்.

கோரிக்கை

கோரிக்கை

இவர்களின் திட்டப்படி அசோக் கெலாட்டை தேசிய தலைவர் ஆக்கலாம். ராஜஸ்தான் முதல்வராக சச்சின் பைலட்டை நியமிக்கலாம் என்று இருந்தனர். எல்லாம் நன்றாக போய்கொண்டு இருந்த நிலையில் நேற்று முதல்நாள் திடீரென அசோக் கெலாட் ஆதரவாளர்கள் சச்சின் பைலட்டை தலைவராக ஏற்க மாட்டோம் என்று அறிவித்தனர். அவர் இரண்டு வருடம் முன் அரசுக்கு எதிராக செயல்பட்டார். இதனால் அசோக் கெலாட் அணியை சேர்ந்தவரை முதல்வராக்க வேண்டும்.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

அல்லது அசோக் கெலாட் இரண்டு பதவிகளையும் சேர்ந்து வகிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்த விவகாரத்தில் சச்சின் பைலட் தொடர்ந்து அமைதியாக இருந்தார். அசோக் கெலாட் இன்னொரு பக்கம்.. எனக்கும் இதற்கும் தொடர்பு இல்லை என்று கூறினார். ஆனால் அவர் சொல்லித்தான் அவரின் ஆதரவு எம்எல்ஏக்கள் இப்படி செய்கிறார்கள் என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டது. சச்சின் பைலட்டை முதல்வர் ஆக்கினால் நாங்கள் ராஜினாமா செய்துவிடுவோம் என்று 90 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மேலிடத்தை மிரட்டினர்.

திட்டினார்?

திட்டினார்?

இதுதான் தற்போது கோபமே படாத சோனியா காந்தியை கோபம் அடைய செய்துள்ளது. பாலுக்கும் ஆசை.. மீசைக்கும் ஆசை என்பது போல அசோக் கெலாட் முதல்வர் பதவியையும் விட கூடாது.. தேசிய தலைமையையும் விட கூடாது என்று செயல்பட்டதை சோனியா காந்தி விரும்பவில்லை என்கிறார்கள். அசோக் கெலாட்டை சமாதானம் செய்ய நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் எல்லாம் தோல்வியில் முடிந்த காரணத்தால் சோனியா காந்தி கடுமையாக கோபம் அடைந்ததாக கூறப்படுகிறது.

சோனியா காந்தி

சோனியா காந்தி

அவர் எப்படி எனக்கு இப்படி செய்யலாம்? ஏன் இப்படி பிடிவாதமாக இருக்கிறார்? என்று சோனியா குறிப்பிட்டதாக தெரிகிறது. அவர் மிகவும் கோபமாக ரியாக்ட் செய்ததாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். காங்கிரஸ் கட்சியில் பல விசுவாசிகள் சோனியா தரப்பை ஏமாற்றி உள்ளனர். விட்டு விலகி சென்று உள்ளனர். ஆனால் அசோக் கெலாட் இப்படி செய்வார் என்று எப்போதுமே சோனியா எதிர்பார்த்தது இல்லை. ஆனால் இப்போது அவரே பிடிவாதமாக இருப்பது சோனியா காந்தியை அதிர வைத்துள்ளது.

கெலாட்

கெலாட்

இந்த சம்பவம் காரணமாக சோனியா காந்தி, அசோக் கெலாட்டை தலைவராக்கும் எண்ணத்தில் இல்லை என்று கூறப்படுகிறது. அவரை தலைவராக்க வேண்டாம்.. முகுல் வாஸ்னிக், கார்கே போன்றவர்களை தலைவராக்கலாம் என்று சோனியா கருதுவதாக கூறப்படுகிறது. அதோடு ராஜஸ்தானில் அடுத்த தேர்தலில் சச்சினை முன்னிறுத்தலாம், அசோக் கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம், அசோக் கெலாட்டை ஓரம் கட்டலாம் என்ற முடிவிற்கும் சோனியா காந்தி வந்துள்ளதாக தெரிகிறது.

English summary
Why did he do this? Sonia Gandhi angry at Ashok Gehlot for the Rajasthan tussle
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X