
"அண்ணி"யின் ரூமில் 2 மச்சினன்கள்.. ஒரே அக்கப்போர்.. வாசலில் மாமியார்.. "கன்றாவி" காரணத்தை பாருங்க
கான்பூர்: இன்னொரு கொடுமை அதே உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.. பெண்களுக்கு பெண்கள்தான் எதிரி என்று சொல்வதுபோல், நடந்துள்ள அந்த கொடிய சம்பவம், மக்களை நிலைகுலைய வைத்துள்ளது.
பெரும்பாலான வட மாநிலங்களின் கிராமங்களில் கல்வி மறுக்கப்படுவதால், நாளுக்கு நாள் குற்றங்கள் பெருகி கொண்டிருக்கின்றன.
வேணாம் விட்ருங்க! கணவரை கட்டிப்போட்டு கண்முன்னே.. 5 பேர்! கதறிய கர்ப்பிணி பெண்! பாகிஸ்தானில் பகீர்!
மூடநம்பிக்கைகளை மறைமுகமாக மற்றும் நேரடியாக திணிக்கும் போக்கும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.. இவை எல்லாம் சேர்ந்துதான், மனிதனை சில சமயங்களில் மிருகமாக்கிவிடுகிறது..

குஸ்மா
பாட்டி, மகள், தங்கை, சிறுமி என பாகுபாடு இல்லாமல் சீரழிக்கப்படுகிறார்கள் சில கயவர்களால்.. பெண்கள் மீதான வன்முறை தாக்குதலும் இதுவரை குறைந்தபாடில்லை. அந்த வகையில், உத்தரபிரதேச மாநிலம் பெருத்த அதிர்ச்சியை தினமும் ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.. ஹமிர்புர் மாவட்டத்தை சேர்ந்தவர் அந்த பரிதாப பெண்.. பெயர் குஸ்மா.. இவரது கணவர் பெயர் நீரஜ் ப்ரஜாப்தி.. கல்யாணம் ஆகி 10 வருடமாகிறது.. இந்த தம்பதிக்கு ப்ரான்ஷி என்ற 7 வயதிலும், ஆர்த்தி என்ற 2 வயதிலும் பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்..

அந்தரங்க உறுப்பு
ஆனால், ஆண் வாரிசு இல்லை என்ற காரணத்திற்காக, நடுரோட்டில் கட்டி வைத்து அடித்து தாக்கி உள்ளனர்.. அந்தரங்க உறுப்பலும் கொடுமையாக அடித்து கட்டையால் தாக்கி உள்ளனர்.. இப்போது இன்னொரு சம்பவமும் நடந்துள்ளது.. பண்டா மாவட்டத்தை சேர்ந்தவர் அந்த பெண்.. திருமணமாகி பல வருடமாகிவிட்டது.. ஆனால் குழந்தை இல்லை.. அந்த குடும்பத்தின் மூத்த மகனை., அந்த பெண் திருமணம் செய்திருந்தார்... மருமகள் குழந்தை பெற்றுத்தராத கோபம் மாமியாருக்கு நாளுக்கு நாள் அதிகமானது..

கர்ப்பம்
மருமகள் கர்ப்பம் தரிக்காத காரணத்தால், எப்படியாவது அவரை கர்ப்பம் தரிக்க வேண்டும் என்று பிளான் போட்டார்.. அதன்படி, தன்னுடைய 2 இளைய மகன்களையும், மருமகளின் அறைக்கு அனுப்பி, அந்த பெண்ணை பலாத்காரம் செய்யுமாறு சொன்னாராம்.. அதேபோல, மைத்துனர்கள் 2 பேரும், அண்ணி என்றும் பாராமல், ரூமுக்குள் நுழைந்து பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இருவரும் வேறு வேறு நாளில் அண்ணியை பலாத்காரம் செய்தார்களாம்.. இதையடுத்து, பாதிக்கப்பட்ட மருமகள், போலீசில் புகார் தந்தார்..

பலவீனம்
போலீசாரும் வழக்கு பதிவுசெய்து, மாமியார், 2 மைத்துனர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். நடந்த சம்பவம் குறித்து, டிஎஸ்பி ராஜேஷ்குமார் சிங் சொல்லும்போது, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு குழந்தை இல்லை.. இவரது கணவருக்கு உடல்நல கோளாறு இருக்கிறது.. அந்த பலவீனம் காரணமாகவே, திருமணம் ஆகியும் கர்ப்பம் தரிக்கவில்லை.. அதனால்தான் மாமியார், 2 மகன்களை வெவ்வேறு நாட்களில் அந்தப் பெண்ணின் அறைக்கு அனுப்பி பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் வந்துள்ளது.

மாமியார்
இதுகுறித்து விசாரித்தோம்.. பேரன் வேண்டும் என்ற ஆசையில் மாமியார் இப்படி தவறான செயலில் ஈடுபட்டது தெரியவந்தது... தொடர்ந்து அவர்களிடம் விசாரித்து கொண்டிருக்கிறோம்" என்றார்கள்.. இந்த சம்பவங்களை எல்லாம் கேள்விப்படும்போது, மக்களிடம் அதிர்ச்சியைதான் உண்டாக்கி வருகிறது.. எந்த ஒரு தேசம், கல்வியறிவை முழுமையாக பெறுகிறதோ, அந்த தேசம்தான் உண்மையிலேயே வளர்ச்சி பெற்ற தேசமாக கருதப்படும்.. ஆனால், வடமாநில மக்கள் இந்த கல்வியை பெற இன்னும் எவ்வளவு காலம் கடக்க வேண்டி இருக்குமோ?! மறுக்கப்படாத கல்வி அவர்களுக்கு எப்போது கிடைக்குமோ? தெரியவில்லை..!