• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

"ஜூலி"யின் திருவிளையாடல்.. விடிகாலையில் கண்ணெதிரே பார்த்த மகன்.. தலை வேறு.. உடம்பு வேறு.. என்னாச்சு?

Google Oneindia Tamil News

ஜெய்ப்பூர்: 19 வயது மகனை வீட்டில் வைத்து கொண்டு ஜூலி போட்ட ஆட்டம் கொஞ்சநஞ்சமல்ல.. இப்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்..!

கொலை, தற்கொலை, பாலியல் வன்கொடுமை உட்பட சம்பவங்கள் பல பெருகி கொண்டிருக்கின்றன.. இதில் பெரும்பாலான உயிர்பலிகள் கள்ளக் காதலை மையமாக வைத்தே நடந்து வருவது வேதனை தருகிறது.

இந்த கள்ளக்காதலுக்கு பிஞ்சு குழந்தைகளை பெற்ற தாய்களே கொல்வது அதைவிட கொடுமையாக இருக்கிறது.. இப்போது மீண்டும் ஒரு கள்ளக்காதல் கொலை வடமாநிலத்தில் நடந்துள்ளது.

பாஜக நிர்வாகி கொலை! மாமா வீட்டில் ட்ரஸ் சேஞ்ச்! தண்ணீர் குடித்து சவகாசமாய் எஸ்கேப்பான கொலையாளிகள்! பாஜக நிர்வாகி கொலை! மாமா வீட்டில் ட்ரஸ் சேஞ்ச்! தண்ணீர் குடித்து சவகாசமாய் எஸ்கேப்பான கொலையாளிகள்!

கணவர்

கணவர்

பீகார் மாநிலம் பாட்னாவில் திதர்கஞ்ச், தர்ம்ஷாலாகாலியை சேர்ந்தவர் ஜூலி தேவி.. இவரது மகன் சூரஜ்.. 19 வயதாகிறது.. ஜூலி கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டு பிரிந்துவிட்டார்.. இப்போது மகனுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.. இவரது வீட்டில் தர்மேந்திர குமார் என்ற இளைஞர் வாடகைக்கு வந்தார்.. ஜூலியின் அழகு, தர்மேந்திர குமாரை ஈர்த்தது.. கணவரை பிரிந்து தனிமையில் வாழும் சூழல் இதற்கு வசதியாகி விட்டது..

 வாடகைக்கு குடிவந்த இளைஞர்

வாடகைக்கு குடிவந்த இளைஞர்

அதுபோலவே, இளைஞரை ஜூலிக்கும் பிடித்துவிட்டது.. இருவரும் நெருக்கமாகினர்.. கள்ளக்காதல் தாண்டவமாடியது. மகன் சூரஜ் வீட்டில் இல்லை என்றால் போதும், இருவருக்குமே குஷிதான்.. இந்நிலையில், தன்னுடைய அம்மாவின் நடவடிக்கையில் மாற்றம் இருப்பது மகனுக்கு தெரியவந்தது.. இதனால், அம்மாவின் செயல்களை கண்காணிக்க ஆரம்பித்தார்.. அப்போதுதான், தர்மேந்திர குமாருடன், அம்மாவின் கள்ள உறவு இருப்பது தெரிந்து அதிர்ந்து போனார் மகன்.. இதை ஒருநாள் கண்ணெதிரிலேயே மகன் பார்த்துவிட்டார்..

 கொடூர கொலை

கொடூர கொலை

இதனால் அம்மா மீது கோபம் வந்தது.. உரிமையாய் கண்டித்தார்.. அந்த இளைஞரை வீட்டை விட்டு வெளியேற்றுமாறும் அம்மாவிடம் சொன்னார்.. அதேபோல, இளைஞரிடம் சென்று, தன் அம்மாவை விட்டுவிடுமாறு கெஞ்சினார்.. ஆனால், இந்த கள்ள ஜோடி, சூரஜ் பேச்சை காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை.. ஒருகட்டத்தில் பொறுமையிழந்த மகன், தர்மேந்திர குமாருடன் நேரடியாகவே மோதிவிட்டார்.. அப்போதும் தர்மேந்திர குமார் தன்னை திருத்தி கொள்ளவில்லை..

 ஜூலி பிளான்

ஜூலி பிளான்

இதனால் மனம் வெறுப்படைந்த சூரஜ், தன்னுடைய பாட்டி வீட்டுக்கு போய்விட்டார்... கோபித்து கொண்டு போன மகனை, ஜூலி சமாதானப்படுத்தவே இல்லை.. மறுபடியும் வீட்டுக்கு கூப்பிடவும் இல்லை. இந்நிலையில், மே 22 ம் தேதி இரவு, ரோட்டில் சூரஜ் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த தர்மேந்திர குமார், தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து சூரஜ்ஜை அடித்து கொன்றுவிட்டனர்.

தண்டவாளம்

தண்டவாளம்

பிறகு, உடலை உடல் வேறு, தலை வேறாக வெட்டினார்கள்.. உடலை எடுத்துகொண்டுபோய், ரயில் தண்டவாளத்தில் வீசினர்.. தலையை கொண்டு போய் குழி தோண்டி புதைத்துவிட்டனர்.. இதெல்லாம் இரவோடு இரவாக நடந்து முடிந்துவிட்டது.. விடிகாலை, தண்டவாளத்தில் தலையில்லா உடம்பை பார்த்த பொதுமக்கள் அலறி அடித்து கொண்டு ஓடினார்கள்.. ரயில்வே போலீசார் விரைந்து வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்...

 விசாரணை

விசாரணை

அப்போது போலீசுக்கு வந்த முதல் டவுட்டே ஜூலி மீதுதான்.. அவரை பிடித்து விசாரித்ததில் கள்ளக்காதல் விவகாரமும், அதற்கு மகன் எதிர்ப்பு தெரிவித்ததும், தெரியவந்தது.. அதுமட்டுமல்ல, மகனை கொல்ல ஐடியா தந்ததே ஜூலிதான் என்றும், தான் சொன்னதாலேயே கள்ளக்காதலன் மகனை அடித்து கொன்றதாகவும் ஒப்புக்கொண்டார். இந்நிலையில் ஜூலி தேவியின் கள்ளக்காதலன் தர்மேந்திர குமார் மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் கைது செய்தனர்.

English summary
why did woman arrest in jaipur and what happened to her 19 year old son தாயின் கள்ளக்காதலை கண்டித்த மகன் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X