For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இவாங்கா என்ன இளவரசி டயானாவா?.. ஏன் இத்தனை முக்கியத்துவம்.. தடபுடல் வரவேற்பு??

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகள் இவாங்கா டிரம்ப் இந்தியா வந்துள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    இவாங்கா என்ன இளவரசி டயானாவா?.. தடபுடல் வரவேற்பு??..வீடியோ

    ஹைதராபாத்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகள் இவாங்கா டிரம்ப் இந்தியா வந்துள்ளார். இவாங்கா டிரம்ப், டொனால்ட் டிரம்பிற்கு முதன்மை ஆலோசகராகவும் செயல்பட்டு வருகிறார்.

    ஹைதராபாத்தில் நடக்கும் சர்வதேச தொழில்முனைவோர் மாநாட்டில் கலந்து கொள்ள இவாங்கா டிரம்ப் இந்தியா வந்துள்ளார். இதன் ஒருபகுதியாக நேற்று ஹைதராபாத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

    இவாங்கா வருகைக்காக நிறைய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. முக்கியத்துவம் தரப்பட்டது. இவாங்காவிற்கு மோடி அரசு இவ்வளவு மதிப்பளித்து ஏன் என்று கேள்வி உருவாகியுள்ளது.

     பல மாற்றங்கள்

    பல மாற்றங்கள்

    இவாங்கா டிரம்ப் வருகைக்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே ஹைதராபாத்தில் பிச்சை எடுக்க தடை விதிக்கப்பட்டது. தெருவில் எந்த நாயும் இருக்க கூடாது என்பதற்காக பல தெரு நாய்களுக்கு விஷம் கொடுக்கப்பட்டது. பாலங்களுக்கு வித்தியாசமாக பெயிண்ட் அடித்து அழகுபடுத்தப்பட்டது.

     இவாங்காவிற்கு ரெட் கார்பெட்

    இவாங்காவிற்கு ரெட் கார்பெட்

    நேற்று முக்கியமாக இவாங்காவிற்கு ரெட் கார்பெட் மரியாதை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் பலரையும் ஆச்சரியப்படுத்தியது. பெரும்பாலும் இந்தியா வரும் ராஜ குடும்பங்களுக்கு மட்டுமே இந்த மரியாதை அளிக்கப்படும். அதிபரின் மகள் ஒருவருக்கு முதல்முறையாக இவ்வளவு மரியாதை அளிக்கப்பட்டுள்ளது. கடைசியாக இங்கிலாந்து ராணி டயானாவிற்கு சிவப்பு கம்பள மரியாதை அளிக்கப்பட்டது.

     மிக பெரிய படை

    மிக பெரிய படை

    அதேபோல் நேற்று நடந்த இன்னொரு விஷயமும் பெரிய விவாதத்தை உருவாக்கியது. இவாங்காவிற்கு பாதுகாப்பாக முன்னும் பின்னும் மொத்தாமாக 34 கார்கள் சென்றது. பிரதமருக்கும், ஜனாதிபதிக்கும் கூட இத்தனை கார்கள் சென்றது இல்லை. அதேபோல் இரண்டு ஆம்புலன்ஸ்களும் சென்றது. இந்தியாவில் மிகப்பெரிய மரியாதை அளிக்கப்பட்ட ஒரே நபர் இவர் மட்டும்தான். இந்தியா வந்திருந்த அமெரிக்க அதிபர்களுக்கு கூட இவ்வளவு பாதுகாப்பு இல்லை.

     நகரமே முடக்கப்பட்டது

    நகரமே முடக்கப்பட்டது

    நேற்று ஹைதராபாத் முழுக்க அறிவிக்கப்படாத 144 சட்டம் செயல்பட்டு வந்தது. மக்கள் பலர் வெளியே செல்லவே அனுமதிக்கப்படவில்லை. பலரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. துப்புரவு பணியாளர்கள் தொடங்கி பலருக்கும் கூடுதல் வேலை கொடுக்கப்பட்டது. 10,000க்கும் அதிகமான போலீஸ்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் சிறப்பு ராணுவப்படையும் கொண்டு வரப்பட்டது.

     ஏன் இவ்வளவு முக்கியத்துவம்

    ஏன் இவ்வளவு முக்கியத்துவம்

    இவாங்காவிற்கு அளிக்கப்பட்ட இத்தனை முக்கியத்துவம் மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இவாங்கா ஒரு தொழில் அதிபர், அமெரிக்க அதிபரின் மகள், ஆனால் அதை தவிர அவரைப்பார்த்து ஒரு பிரதமர், மிகுந்த மரியாதை தரும் அளவுக்கு எதுவும் பெரிய பதவியில் அவர் இல்லை. டிரம்ப் அதிபர் ஆகும் முன்பு இவாங்கா ஏற்கனவே இந்தியா வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Ivanka Trump, the daughter of US President Donald Trump and his advisor visits India for Global Entrepreneurship Summit. She met PM Modi today. Ivanka Trump is the first woman to get red carpet after Diana.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X