For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சட்டப்படி தப்பாச்சே.. ரிலையன்ஸ் ஜியோ விளம்பரத்தில் மோடி போட்டோ இருந்ததே ஏன்? #Jio

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: ரிலையன்ஸ் ஜியோ நிறுவன பத்திரிகை விளம்பரத்தில் பிரதமர் மோடி படம் இடம் பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜியோ அறிமுகத்தை முன்னிட்டு நேற்று காலை வெளியான டைம்ஸ் ஆப் இந்தியா, ஹிந்துஸ்தான் டைம்ஸ் போன்ற தேசிய ஆங்கில நாளிதழ்களின் முழுப்பக்க-முதல்பக்க (ஜாக்கெட் விளம்பரம்) விளம்பரத்தில் மோடியின் போட்டோ பெரிதாக இடம் பிடித்திருந்தது.

Why is Narendra Modi in a Reliance Jio advertisement?

பிரதமரின் டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கும், 120 கோடி நாட்டு மக்களுக்கும், ஜியோவை அர்ப்பணிக்கிறோம் என்று விளம்பரத்தில் வாசகமும் இடம் பெற்றிருந்தது.

நேற்று மும்பையில் நடந்த ஜியோ அறிமுக விழாவிலும், முகேஷ் அம்பானி, பிரதமரின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை குறிப்பிட்டு பேசியிருந்தார்.

இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் போன்றோர், அம்பானி நிறுவன விளம்பரத்தில் மோடி போட்டோ இடம் பெற்றுள்ளது என்று சுட்டி காட்டி, இதைவிட வேறு ஆதாரம் வேண்டுமா என கேட்டு விமர்சனம் செய்துள்ளனர். தொழிலதிபர்களுக்கு, மோடி ஆதரவாக நடந்து கொள்வதாக அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

இதுமட்டுமில்லாமல், The Emblems And Names (Prevention Of Improper Use) Act, 1950, என்ற சட்டப்பிரிவின்படி, வணிக பயன்பாட்டுக்கு, மத்திய அரசின் சின்னத்தையோ, அரசின் தொடர்புடைய பிம்பங்களையோ பயன்படுத்த கூடாது. ஆனால், அனுமதி பெற்று பயன்படுத்திக்கொள்ள முடியும். ரிலையன்ஸ் அந்த அனுமதியை பெற்றிருக்கும் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது.

ஆனால், நெட்டின்கள் விமர்சனத்தில் இருந்து இந்த நிகழ்வு தப்ப முடியவில்லை.

English summary
The Times of India and the Hindustan Times woke up to a full-page jacket advertisement with Prime Minister Narendra Modi, dressed in a blue jacket, staring at them from under the words “Jio: Digital Life”.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X